டி20 உலகக்கோப்பை.. டாப் 10இல் ஒரு இந்திய பந்துவீச்சாளர் கூட இல்லை.. சிறந்த எக்கானமி பட்டியல்
நியூயார்க் : 2024 டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இதுவரை நடந்த டி20 உலக கோப்பை தொடர்களில் குறைவாக ரன்கள் விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த பட்டியலில் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் பந்து வீசிய பந்துவீச்சாளர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் மிகவும் சிக்கனமாக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் சுனில் நரைன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 12 போட்டிகளில் 44 ஓவர்கள் வீசி இருக்கிறார். அவரது எக்கானமி 5.17 ஆகும்.

அடுத்த இடத்தில் தென்னாபிரிக்காவின் அன்ரிச் நோர்ஜே இருக்கிறார். அவர் 10 போட்டிகளில் விளையாடி 36 ஓவர்கள் வீசி இருக்கிறார். அவரது எக்கானமி 5.37 ஆகும். மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ஹமீத் ஹாசன் இருக்கிறார். அவர் 9 போட்டிகளில் 31 ஓவர்கள் வீசி 5.42 எக்கானமி வைத்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 11 வது இடத்தில் புவனேஸ்வர் குமார் இருக்கிறார். அவர் 13 போட்டிகளில் 40 ஓவர்கள் வீசி 5.97 எக்கனாமி வைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய வீரர்களில் புவனேஸ்வர் குமார் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் பும்ரா மற்றும் மூன்றாவது இடத்தில் ஆர்பி சிங் உள்ளனர். இதில் ஆர்பி சிங் ஓய்வு பெற்று விட்ட நிலையில், பும்ரா எந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசி இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
இதுவரை டி20 உலக கோப்பை தொடரில் 10 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார் பும்ரா. அதில் 39 ஓவர்கள் பந்துவீசி 14 விக்கெட்கள் வீழ்த்தி 6.35 எக்கானமி வைத்துள்ளார். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பங்கேற்று இருந்தால் அவரது எக்கானமி மற்றும் விக்கெட் எண்ணிக்கை இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். புவனேஸ்வர் குமார் பதினோராவது இடத்தில் இருந்தாலும் அவர் 13 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications