Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சே! தவறான முடிவு எடுத்த இந்தியா.. ஆப்பு வைத்த ஐசிசி.. யார் பேச்சையும் கேட்காத ரோகித்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். சாகல், குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்கள்.

இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த ரோகித் சர்மா, நாங்கள் ஏன் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் உலகக் கோப்பை தொடரின் போது தெரிந்து கொள்வீர்கள் என்று கூறினார்.

t20 world cup indian national cricket team cricket 20 2024

அதாவது டி20 உலக கோப்பை நடைபெறும் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் சுழற் பங்குவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அதனால் தான் இந்த முடிவை தாங்கள் எடுத்ததாக ரோகித் சர்மா மறைமுகமாக கூறினார். அப்போது இதை பலரும் வரவேற்றார்கள். ஏனென்றால் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் செயல்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது ஐசிசி மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற மைதானங்களில் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய வேகப்பந்துவீச்சை வைத்து இலங்கை அணியை சுக்கு நூறாக உடைத்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இந்த ஆடுகளத்தில் சாதாரண பவுலர் கூட வெறித்தனமாக பந்து வீசுகிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் தற்போது பும்ரா, முகமது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங், சிவம் துபே ,ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள்.

இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர் அணியில் இடம் பெறவில்லை. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இதனால் ஆடுகளத்தை தவறாக கணக்கிட்டு இந்திய அணி இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் அடைந்து விட்டது எனக் கூறி வேறு ஒரு வேகப்பந்துவீச்சாளரை கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

Story first published: Wednesday, June 5, 2024, 15:21 [IST]
Other articles published on Jun 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+