Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கைவிட்ட முக்கிய வீரர்கள்.. ‘கிங்’ கோலியின் க்ளாசிக் ஆட்டம்.. பாகிஸ்தானுக்கு சவால் இலக்கு நிர்ணயம்!

அமீரகம்: விராட் கோலியின் விடாப்பிடி போராட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் டாஸ் வெல்வது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி டாஸில் தோல்வியடைந்த இந்திய அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா டக் அவுட்டும், கே.எல்.ராகுல் 3 ரன்னுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சாஹீர் அஃப்ரிடி இந்த 2 விக்கெட்களை எடுத்தார்.

சரிந்த டாப் ஆர்டர்

சரிந்த டாப் ஆர்டர்

இதன் பின்னர் வந்த கேப்டன் கோலி நிதானமாக விளையாடினாலும், அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் ஹசன் அலி பந்துவீச்சில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி பவர் ப்ளேவுக்குள் 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

முக்கிய பார்ட்னர்ஷிப்

முக்கிய பார்ட்னர்ஷிப்

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரிஷப் பண்ட் ஜோடி இந்திய அணியை தூக்கி நிறுத்தினர். ஒருபுறம் பண்ட் அதிரடி காட்ட கோலி நிதானமாக விளையாடினார். இதனால் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்து இந்திய அணியின் ஸ்கோர் 84 ரன்களுக்கு சென்றது. ஆனால் நீண்ட நேரம் இந்த ஜோடி நிலைக்கவில்லை. அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 30 பந்துகளில் 39 ரன்கள் விளாசி வெளியேறினார்.

கடைசி நேர அதிரடி

கடைசி நேர அதிரடி

இதனால் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்ட விராட் கோலி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார். 49 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 57 ரன்களை சேர்த்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த ஜடேஜா 13 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது.

Story first published: Sunday, October 24, 2021, 21:27 [IST]
Other articles published on Oct 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+