Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா உலககோப்பை வென்றதற்கு இவர் இல்லாததே காரணம்.. குட்டி கோலி வந்த பிறகு ஒரு கோப்பை கூட கிடைக்கல

மும்பை : டி20 உலக கோப்பையை இந்தியா வென்றதற்கு இவர்தான் காரணம், அவர்தான் காரணம் என்று நாம் பல வீரர்களை பாராட்டி கேட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு வீரர் இல்லாததால் தான் இந்தியா வெற்றியை பெற்றது என்று சொல்லி பார்த்திருக்கிறோமா?

ஆம் அதுதான் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நபர் இல்லாததால் தான் இந்தியா வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அது வேறு யாருமில்லை. குட்டி கோலி என்று ரசிகர்களால் கிண்டல் செய்யப்படும் கே எல் ராகுல் தான்.

t20 world cup india cricket team virat kohli

கேஎல் ராகுல் திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும், அவருடைய பேட்டிங்கில் சில பிரச்சனை இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது குறிப்பாக டி20 போட்டிகளில் விளையாடும் போது கே எல் ராகுல் ஸ்ட்ரைட் மிகவும் குறைவாக இருக்கும் என்று ரசிகர்கள் குறை கூறுவார்கள்.

குறிப்பாக இந்தியா 2021 டி20 உலககோப்பை போட்டி மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளில் தோல்வி அடைந்ததற்கு கே.எல். ராகுல் தொடக்கவீராக களம் இறங்கியது காரணம் என்று குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது. இதற்கு காரணம் ரோகித் சர்மா ஒரு முனையில் தடுமாறும் போது கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடாமல் அவரும் பந்துகளை வீணடித்து ரன்களை சேர்ப்பது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அத்தி பூத்தாப் போல் ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் கே எல் ராகுல் அதிரடியாக விளையாடினாலும், அடுத்த 10 இன்னிங்ஸ்களில் பந்துகளை சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தார். கே எல் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 72 போட்டிகளில் விளையாடி 2265 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 139 என்ற நிலையிலே இருக்கிறது.

இது கடந்த சில காலமாக தான் இந்த ஸ்ட்ரைக் ரேட் உயர்ந்திருக்கிறது. அதற்கு முன்பு மிகவும் மோசமான நிலையிலே இருந்தது. இதனை உணர்ந்து கொண்ட தேர்வு குழுவினர், கே எல் ராகுலை டி20 கிரிக்கெட் போட்டிகளில் சேர்க்கவில்லை. இதனால் அந்த இடத்திற்கு விராட் கோலி வந்து தற்போது இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இதனால் தான் கே எல் ராகுலை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் கே எல் ராகுல் 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். இதுவரை 10 ஆண்டுகள் அவர் விளையாடி இருக்கிறார். இந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்தார்கள். தற்போது அவர் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இந்தியா கோப்பையை வென்று இருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி கிண்டல் அடித்து வருகின்றனர்.

Story first published: Monday, July 1, 2024, 19:34 [IST]
Other articles published on Jul 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+