Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை வரலாற்றில் இதுவரை நியூசிலாந்தை இந்தியா வென்றதே இல்லை.. புதிய சாதனை படைக்குமா சூர்யகுமார் படை?

ஐசிசி டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஐசிசி உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதவுள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றது இல்லை. இந்த சோகமான சாதனையை மாற்றி 3வது முறையாக கோப்பையை இந்திய அணி சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், டி20 உலகக் கோப்பை பட்டத்தைத் தக்கவைத்து, சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முதல் அணி என்ற பெருமையைப் பெற இந்திய அணி ஆயம்மதாக உள்ளது எனினும், நியூசிலாந்து வலிமையான அணி என்பதால் இது எளிதான காரியமாக இருக்காது. டி20 உலகக் கோப்பை தொடர்களில், நியூசிலாந்து எப்போதும் இந்தியாவை விட சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

இந்த இரு அணிகளும் முதன் முதலில் 2007 டி20 உலகக் கோப்பையில், செப்டம்பர் 16 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 190 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கௌதம் கம்பீர் 51 ரன்களும், வீரேந்திர சேவாக் 40 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2016 டி20 உலகக் கோப்பையில், மார்ச் 15 அன்று நாக்பூரில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா, 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. கேன் வில்லியம்சன் முதலில் பேட் செய்யத் தேர்ந்தெடுத்த நிலையில், நியூசிலாந்து 126/7 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் 79 ரன்களுக்குச் சுருண்டனர். தோனி 30, விராட் கோலி 23 ரன்கள் எடுத்தனர். மிட்செல் சான்ட்னர் 4/11, இஷ் சோதி 3/18 என சிறப்பாகப் பந்துவீசினர்.

2021 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில், அக்டோபர் 31 அன்று துபாயில் நடந்த போட்டியில், நியூசிலாந்து இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா முதலில் பேட் செய்து 110/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து 14.3 ஓவர்களில் 111 ரன் இலக்கை வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இந்தப் படுதோல்வி இந்தியாவை தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளியது.

இந்தியா, நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் 2007இல் 190/10; இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் 2016இல் 79/10 ஆகும். கௌதம் கம்பீர் 51 ரன்கள் எடுத்தது ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டிகளில் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 4 ஓவரில் 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது மிகச்சிறந்த பந்துவீச்சாக உள்ளது. இஷ் சோதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் ஆவார். கௌதம் கம்பீர் மற்றும் வீரேந்திர சேவாக் முதல் விக்கெட்டுக்காக 76 ரன்கள் குவித்து ஒரு இந்திய ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மோசமான சாதனை இருந்தாலும், ஒட்டுமொத்த டி20 சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இதுவரை விளையாடிய 30 போட்டிகளில் இந்தியா 18இல் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த தொடரில் இந்தியா 4-1 என வென்றது. இந்த புள்ளிவிவரங்கள் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, March 8, 2026, 7:30 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+