2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 255 ரன்கள் குவித்தது. பின்னர் நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 3வது டி20 உலகக்கோப்பையை வென்றது.

நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 3வது டி20 உலகக்கோப்பையை வென்றது.
நியூசிலாந்து அணி 15 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து தோல்வி முகம்
நியூசிலாந்து அணி 11 ஓவர் முடிவில் 103 ரன்களுக்கு 5 விக்கெட். வெற்றிக்கு 54 பந்துகளில் 153 ரன்கள் தேவை
நியூசிலாந்து அணி 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, நியூசிலாந்து 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
நியூசி அதிரடி வீரர் ஃபின் ஆலன் 0 ரன்களில் இருந்த போது ஃபின் ஆலன் கேட்சை கோட்டை விட்டார்
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயம் செய்யப்படுள்ளது.
இந்திய அணி கடைசி ஓவர்களில் மோசமாக தடுமாறியது. ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்துள்ளது.
16வது ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்தது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் ஆட்டமிழந்தனர். ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்களை அள்ளினார். இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.
சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 15.1 ஓவரில் 203 ரன்கள் குவித்து 2 விக்கெட் இழந்தது.
13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 18 பந்துகளில் 42 ரன்களும், சாம்சன் 39 பந்துகளில் 69 ரன்களும் குவித்துள்ளனர்.
9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி அதிரடி துவக்கத்தை பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா தனது வழக்கமான அதிரடியை காட்டினார். சாம்சனும் பவுண்டரிகளை குவித்து வருகிறார்.
இந்திய அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது. சாம்சன் 11 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து இருந்தார்.
அபிஷேக் சர்மா இந்தப் போட்டியில் ரன் குவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், 3 ஓவர்கள் முடிவில் 7 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்தார்.
சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா துவக்கம் அளிக்க களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்து 7 ரன்கள் சேர்த்தார்.
டாஸ் இழந்தாலும், முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியே என்று இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். அரையிறுதிப் போட்டி மற்றும் கடந்த கால வரலாறுகள் முடிந்துவிட்டன என்றும், இது புதியதொரு உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்பதால் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். நாக் அவுட் போட்டிகளில் முதலில் ரன்களைக் குவித்துவிட்டுப் பந்துவீசுவது அணிக்குச் சாதகமான விஷயம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
டாஸ் வென்ற பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தயக்கம் ஏதுமின்றி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாகத் தெரிவதாகவும், முதலில் பந்துவீசி இந்திய அணியைக் குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இது ஒரு மிகப்பெரிய மேடை என்றும், அரையிறுதி வெற்றி அணிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோல் மெக்கன்சிக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி: டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன், ஜேக்கப் டஃபி.
இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் விவரம்: இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதுவரை எந்த அணியும் சொந்த மண்ணிலும், தொடர்ந்து 2 முறையும், மொத்தமாக 3வது முறையும் டி20 உலககோப்பையை வென்றது இல்லை. இதனால் சரித்திரம் படைக்க இந்திய அணிக்கு வாய்ப்பு
அண்மையில் இரு அணிகளுக்கும் நடந்த இருத்தரப்பு தொடரில் இந்திய அணி 4க்கு1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.
டி20 உலககோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணியிடம் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலககோப்பை இறுதிப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.