IND vs NZ: பைனலில் 300 ரன்கள் கூட அடிக்கலாம்.. அகமதாபாத் ஆடுகளத்தை மாற்றிய ஐசிசி.. விவரம்
அகமதாபாத்: 2026 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா , நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுகிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்குச் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் க 250 ரன்கள் மேல் எடுக்கப்படும் அளவுக்கு ஆடுகளம் தன்மை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவலின் படி, போட்டி நடைபெறும் மைய ஆடுகளம், இத்தொடரில் கனடா - தென் ஆப்பிரிக்கா மோதிய ஒரு போட்டியை மட்டுமே முன்னதாக நடத்தியுள்ளது. அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 213/4 ரன்கள் குவித்து, 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

புதிய ஆடுகளம், சிவப்பு மற்றும் கருப்பு மண்ணின் கலவையாக இருக்கும். இது பந்துவீச்சாளர்களுக்கு குறைந்த சுழற்சியையும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வேகம் மற்றும் பவுன்ஸையும் வழங்கும். இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அரையிறுதிப் போட்டியில் வான்கடே மைதானத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தைப் போலவே இது இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த ஆடுகளமானது, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா . ஆஸ்திரேலியா மோதிய ஆடுகளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அந்தப் போட்டிக்கு பயன்படுத்தப்பட்டது காய்ந்த கருப்பு மண்ணால் ஆனது. பவுன்ஸ் குறைவாக இருந்தது. இதனால் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐசிசி தொடர்களுக்கு அதன் நிர்வாகியின் வழிகாட்டுதலின்படி ஆடுகளங்கள் தயாரிக்கப்படும். இருப்பினும், 2023 உலகக் கோப்பை இறுதி ஆடுகளம் அமைப்பது குறித்து இந்தியாவின் தலையிடு இருந்ததாகவும், அது பின்னடைவாகவே முடிந்தது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இம்முறை இந்திய அணி அல்லது பிசிசிஐ-க்கு எந்த அளவு தலையிடும் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
ரன் குவிப்புக்கு சாதமான ஆடுகளங்கள் விக்கெட்டுகளை எடுக்க கூடுதல் திறமை வேண்டும். இது வலுவான பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகும். எனவே, இந்த ஃப்ளாட் பிட்ச் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய பேட்டிங் வரிசைக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் இந்தியா 253 ரன்கள் குவித்த போதிலும், வெறும் ஏழு ரன்கள் வித்தியாசத்திலேயே வென்றது. ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர, மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். இது இந்திய பந்துவீச்சு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா வெல்ல வேண்டுமானால், அவர்களது பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்துக்கு எதிரான அதிரடி காட்டியது போல் மீண்டும் விளையாட வேண்டும். நியூசிலாந்திலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளதால், இந்தியா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட் வீழ்த்தும் திறனை நம்பியிருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications