For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலக கோப்பையைத் தட்டி தூக்கிய ஆஸ்திரேலியா.. வலுவான நியூசிலாந்தை அசால்ட்டாக வீழ்த்திய ஃபின்ச் படை

துபாய்: இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வது இதுவே முதல்முறையாகும்.

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின

இரண்டு அணிகளும் டி20 உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை என்பதால் இந்த போட்டியில் அனல் பறந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

துபாயில் கடைசியாக நடைபெற்ற 17 போட்டிகளில் 16இல் சேஸ் செய்யும் அணியே வென்றுள்ளது. ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 192 ரன்கள் குவித்தது. அதன் பிறகு கேகேஆர் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும், அவர்களால் வெற்றிகரமாக சேஸ் செய்ய முடியவில்லை,. எனவே, டாஸ் வென்றாலே போட்டியை வென்றுவிட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை இருந்தது. ஆஸ்திரேலியாவின் பிளேயிங் 11 மாற்றம் எதுவும் இல்லை. அதேநேரம் நியூசிலாந்தின் டெவோன் கான்வே காயமடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக டிம் சிஃபெர்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளும் இதுவரை 14 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 9 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் 4 போட்டிகளில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

நியூசிலாந்து தடுமாற்றம்

நியூசிலாந்து தடுமாற்றம்

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை, முதலில் ரன்களை எடுக்கவே நியூசிலாந்து தொடக்க வீரர்கள் தடுமாறினர். ஹேசில்வுட் வீசிய 4ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் வீக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டேரில் மிட்செல். இதையடுத்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். ஆஸ்திரேலியா பவுலிங் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்ததால் ரன்களை குவிக்க நியூசிலாந்து சிரமப்பட்டது. 3ஆவது ஓவரில் முதல் பந்தில் அடித்த பவுன்டரிக்கு பிறகு 32 பந்துகளுக்கு நியூசாந்து அணியால் ஒரு பவுன்டரி கூட அடிக்க முடியவில்லை. அவ்வளவு கட்டுக்கோப்பாக ஆஸ்திரேலியா பந்து வீசியது.

சூப்பர் கம்பேக்

சூப்பர் கம்பேக்

இருப்பினும், 11ஆவது ஓவருக்கு பிறகு ஆட்டத்தில் மெல்லச் சூடு பிடித்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய 11ஆவது ஓவரில் 3 பவுன்டரி உட்பட 19 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. இருப்பினும், 12ஆவது ஓவரின் முதல் பந்திலேயே கப்தில் வெளியேறினார். அதன் பின்னரும் அவ்வப்போது பவுன்டரிகளை அடித்து ரன் ரேட்டை விழாமல் பார்த்துக்கொண்டது நியூசிலாந்து. குறிப்பாக ஸ்டார்க் வீசிய 16ஆவது ஓவரில் 4 பவுன்டரி, ஒரு சிக்சர்களை பறக்கவிட்டார் கேன் வில்லியம்சன். அதே ஒரே ஒவரில் நியூசிலாந்து அணி 22 ரன்களை குவித்தது.

172 ரன்கள்

172 ரன்கள்

இந்தச் சூழலில் 18ஆவது ஓவரில் நியூசிலாந்திற்கு இரட்டை செக் வைத்தார் ஹேசில்வுட். அந்த ஓவரன் 2ஆவது பந்தில் க்ளென் பிலிப்ஸ் வெளியேற்றிய அவர், 5ஆவது பந்தில் வில்லியம்சனை அவுட் ஆக்கினார். கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்து அணி முடிந்தவரை ரன்களை எடுக்க முயன்றது. இருப்பினும், கடைசி ஓவரை ஸ்டாக் சிறப்பாக வீச அதில் 10 ரன்களை மட்டுமே நியூசிலாந்தால் எடுக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்துள்ளது.

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் வீசிய 3ஆவது ஓவரில் கேப்டன் ஃபின்ச் 5 ரன்களில் வெளியேறினார். இருப்பினும், இதனால் ஆஸ்திரேலியா தனது கேம் பிளானை மாற்றிக் கொள்ளவில்லை. அடுத்துக் களமிறங்கிய மிட்செல் மார்ஷுடன் கை கோர்த்த ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடத் தொடங்கியது. பவர் பிளே முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 43 ரன்களை எடுத்திருந்தது. அதன் பிறகும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் - வார்னர் ஜோடியால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

கடைசிக்கட்ட பரபரப்பு

கடைசிக்கட்ட பரபரப்பு

சிறப்பாக ஆடி வந்த வார்னர் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். போட்டி மெல்ல ஆஸ்திரேலியா பக்கம் சாய மீண்டும் கப்பானாக வந்தார் போல்ட். 13ஆவது ஓவரை வீசிய போல்ட் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். மறுபுறம் சிக்ஸர் பவுன்டரி என பறக்கவிட்ட மார்ஷ் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். வார்னருக்கு பின் களமிறங்கிய மெக்ஸ்வெல்லும் அதிரடி காட்ட ஆஸ்திரேலியா கிட்டதட்ட வெற்றி உறுதியானது. இருப்பினும், 18ஆவது ஓவரை மிகச் சிறப்பாக வீசிய மில்னே வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

உலக சாம்பியன் ஆஸ்திரேலியா

உலக சாம்பியன் ஆஸ்திரேலியா

இருப்பினும் கடைசிக் கட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் பதற்றப்படாமல் விளையாட ஆஸ்திரேலியா வெற்றி உறுதியானது. 19ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் பவுன்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் மெக்ஸ்வெல். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றிக்குத் தேவையான 173 ரன்களை குவித்தது. மிட்செல் மார்ஷ் 77 ரன்களுடனும், மெக்ஸ்வெல் 28 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வது இதுவே முதல்முறையாகும்.

Story first published: Monday, November 15, 2021, 6:56 [IST]
Other articles published on Nov 15, 2021
English summary
New Zealand vs Australia t20 world cup finals latest updates in Tamil. T20 World cup latest news in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+