Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 இறுதிப் போட்டி.. தடுமாறிய நியூசிலாந்து.. தனியொரு நபராக தூக்கி நிறுத்திய கேன் வில்லியம்சன்

துபாய்: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லயம்சன் ஆரம்பத்தில் பொறுப்பாக விளையாடினாலும் பின்னர் அதிரடி காட்டியதால் நியூசிலாந்து ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

தங்கள் முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் இரண்டு அணிகளும் ஆர்வமாக உள்ளதால் போட்டியில் அனல் பறக்கிறது.

தடுமாறிய நியூசிலாந்து

தடுமாறிய நியூசிலாந்து

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அரையிறுதியில் வென்ற அதே அணியுடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. நியூசிலாந்தின் டெவோன் கான்வே காயம் காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேற அவருக்குப் பதிலாக டிம் சிஃபெர்ட் சேர்க்கப்பட்டார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பவர்பிளேயில் தடுமாறிக் கொண்டிருந்த நியூசிலாந்து அணி, ஹேசில்வுட் வீசிய 4ஆவது ஓவர் தனது முதல் விக்கெட்டை இழந்தது. டேரில் மிட்செல் 11 ரன்களில் வெளியேற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

ஆஸ்திரேலியா பவுலிங்

ஆஸ்திரேலியா பவுலிங்

முதலில் ஆஸ்திரேலியா பவுலிங் கட்டுக்கோப்பாக இருந்ததால் ரன்களை குவிக்க நியூசிலாந்து சிரமப்பட்டது. குறிப்பாக 3ஆவது ஓவர் தொடங்கி அடுத்த 32 பந்துகளுக்கு நியூசாந்து அணியால் ஒரு பவுன்டரி கூட அடிக்க முடியவில்லை. முதல் 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 57 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதில் டாட் பால்கள் மட்டும் 27, கிட்டதட்ட 5 ஓவர்கள். டேரில் மிட்செல் விரைவாக அவுட் ஆகியதால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் பொறுமையாக விளையாடினார் கேன் வில்லியம்சன். இதனால் நியூசிலாந்து ஸ்கோர் ஆமை வேகத்தில் அதிகரித்தது.

அந்த ஒரு ஓவர்

அந்த ஒரு ஓவர்

ஆனால் 11ஆவது ஓவருக்கு பிறகு அத்திரக்கு திரும்பினார் கேன் வில்லியம்சன். மிட்செல் ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் 3 பவுன்டரி உட்பட 19 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. அதில் வில்லியனம்சன் மட்டும் 18 ரன்களை எடுத்தார். இந்த ஓவர் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஏனென்றால், இந்த ஓவரில் வெறும் 21 ரன்களில் கேன் வில்லியம்சன் கொடுத்த எளிய கேட்ச்சை ஹேசில்வுட் கோட்டை விட்டார். இந்த ஒற்றை கேட்சுக்கு ஆஸ்திரேலியா மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருந்தது.

டாப் கியரில் கேன் வில்லியம்சன்

டாப் கியரில் கேன் வில்லியம்சன்

தொடர்ந்து அதிரடியாக விளையாடி கேன் வில்லியம்சன் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிவேகமாகச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் கேன் வில்லயம்சன். முன்னதாக குமார சங்ககாரா மற்றும் ரூட் 33 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தனர். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதல் 19 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து வண்டியை டாப்கியருக்கு திரும்பிய அவர் அடுத்த அடுத்த 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். அடுத்த 15 பந்துகளில் 34 ரன்களை குவிக்க நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் அதிகரித்து.

ஸ்டார்க் பவுலிங்

ஸ்டார்க் பவுலிங்

குறிப்பாக ஸ்டார்க் வீசிய 16ஆவது ஓவரில் 4 பவுன்டரி, ஒரு சிக்சர்களை பறக்கவிட்டார் கேன் வில்லியம்சன். அதே ஒரே ஒவரில் மட்டும் நியூசிலாந்து அணி 22 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் ஸ்டாக் 4 ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கியுள்ளார். ஸ்டாக் வீசிய 4 ஓவர்களில் 12 பந்துகளை கேன் வில்லியம்சன் எதிர்கொண்டார். அதில் மட்டும் வில்லியம்சன் 39 ரன்களை குவித்தார்.

சிறப்பான பேட்டிங்

சிறப்பான பேட்டிங்

கேன் வில்லியம்சன் தொடர்ந்து ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப தனது பேட்டிங் ஸ்டெயிலை மாற்றி வருகிறார். களமிறங்கும் போது அணி எப்படிப்பட்ட சூழலில் உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு பொறுமையாக விளையாடி அவர், 11ஆவது ஓவருக்கு பிறகு அதிரடிக்குத் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் என்ற ஸ்கோரை எடுக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துக் கொண்டே வில்லியம்சன் விளையாடினார்.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து ஆடிய ஆட்டத்தை பார்த்ததால் மேட்ச் முடிந்துவிட்டது என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால் அதன் பின்னர் கேன் வில்லியம்சன் மட்டுமே தனியொரு ஆளாக நியூசிலாந்து அணியைக் கரைசேர்த்தார். 48 பந்துகளில் 85 ரன்களை குவித்திருந்த கேன் வில்லியம்சன் 18ஆவது ஓவரில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

Story first published: Monday, November 15, 2021, 0:15 [IST]
Other articles published on Nov 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+