Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC உடந்தையால் இந்தியா வெற்றி பெற்றதாம்! அழுது, புலம்பும் பாகிஸ்தான் ரசிகர்கள்.. ஒரே கருகிற வாசம் அடிக்குது

மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் சொந்த மண்ணில் டி20 உலக கோப்பையை வெல்லும் முதல் அணி மற்றும் தொடர்ந்து இரண்டு முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்திருக்கிறது.

இதற்கு இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாம் நன்றாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு தான் பிடிக்காதே.

அதை போல் இந்தியாவின் இந்த வெற்றியை பாகிஸ்தான் மற்றும் இலங்கை, வங்கதேசத்தில் உள்ள சில ரசிகர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து அழுது புலம்பி வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஷா, ஐசிசியின் தலைமை பொறுப்பில் இருப்பதால்தான் இந்தியா தொடர்ந்து ஐசிசி கோப்பையை வெல்வதாக வாய் கூசாமல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மைதானங்கள் அமைப்பது போன்ற பணிகளையும் ஐசிசி செய்து வருவதால் தான் இந்திய அணி வெற்றி பெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு தக்க பதிலடி தந்துள்ள ரசிகர்கள், இந்திய அணியின் வெற்றியால் அழுது புலம்ப வேண்டாம் என்றும், உங்களுக்கு வயிறு எரிவதால் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருக்கும் தங்களுக்கு கருகிற வாசம் அடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு தொடரிலும் தோற்கவில்லை என்றும் இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு மண்ணிலும் இந்திய அணி t20 தொடரை வென்றதை மறந்து விட வேண்டாம் என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆசியக் கோப்பை இந்திய அணி வென்றதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவே மோஷின் நக்கி தான் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

அவர் இந்தியாவுக்கு உடந்தையாக செயல்பட்டாரா என்றும் அவர் இருக்கும் போதே நாங்கள் தான் சாம்பியன் பட்டத்தை வென்றோம் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஐபிஎல் போன்ற தொடரை நடத்தி அதில் இருந்து பல திறமையான வீரர்களை தயார் செய்து தான் இந்திய அணி தற்போது தொடர் வெற்றிகளை பெறுவதாகவும் குறைந்தபட்சம் இந்தியா விடமிருந்து பாடம் கற்று உங்களது நாட்டு அணிகளை மேம்படுத்துங்கள் அதை விட்டுவிட்டு புலம்ப வேண்டாம் என்றும் ரசிகர்கள் பதிலடி தந்துள்ளனர்.

Story first published: Monday, March 9, 2026, 16:15 [IST]
Other articles published on Mar 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+