Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி வீரர்களுக்கு கம்பீர் வைத்த விருந்து.. பாதியிலேயே வெளியேறிய அபிஷேக் சர்மா.. காரணம் என்ன?

மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி தங்களுடைய அடுத்த லீக் ஆட்டத்தில் நமீபியாவை வரும் வியாழக்கிழமை டெல்லியில் எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் டெல்லியில் பயிறசி செய்து வரும் நிலையில், அணி வீரர்களுக்கு கம்பீர் தனது வீட்டில் விருந்து அளித்தார். ஆனால், இந்த விருந்தில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார்.

கம்பீரின் சொந்த ஊரில் அணி வீரர்கள் கூடியிருந்த நிலையில், அக்டோபர் 2025-ல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிக்கு முன் நடந்தது போலவே, இந்த விருந்தையும் கம்பீர் ஏற்பாடு செய்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை அணி வீரர்கள் வந்தடைந்த போதும், அபிஷேக் ஷர்மா தனது பையுடன் ஒரு தனிப்பட்ட வாகனத்தில் முன்னதாகவே புறப்பட்டார். மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் நள்ளிரவை நெருங்கிய பின்னரே அணி பேருந்தில் ஒன்றாகப் புறப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான 29 ரன்கள் வெற்றிக்குப் பிறகு, யாதவ் அபிஷேக் ஷர்மா உடல்நலக்குறைவால் அவதிப்படுவதை கேப்டன் சூர்யகுமார் உறுதி செய்தார். தொடக்க ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது களத்தில் காணப்படாத அபிஷேக் குறித்து, போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் அவர், "பும்ராவிற்கு காய்ச்சல் இருந்தது. அபிஷேக்கிற்கும் உடல்நிலை சரியில்லை" என்றார்.

டி20 உலகக் கோப்பைப் பயணத்தில் இந்திய அணியின் அடுத்த மோதலான நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு அபிஷேக் ஷர்மா உரிய நேரத்தில் உடல்நலம் தேறி வருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விருந்தில் இருந்து அபிஷேக் சர்மா முன்னதாக புறப்பட்டதால், ஏதேனும் கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் உடல் நலக்குறைவு தான் காரணம் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கம்பீருக்கு பயிற்சியாளராக இது கடைசி தொடராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டெஸ்ட், ஒருநாள் தொடரில் கம்பீர் வழிகாட்டுதலில் இந்தியா தொடர்ந்து தோல்விகளை தழுவி வருகிறது. இதனால், தனது பணியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால், கம்பீர் டி20 உலககோப்பையை வெல்ல வேண்டும். இல்லையேன்றால் அந்த பதவிக்கு விவிஎஷ் லட்சுமண் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Monday, February 9, 2026, 15:06 [IST]
Other articles published on Feb 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+