Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘ஹர்திக் இருக்கட்டும்.. அவர தூக்குங்க’.. இந்திய அணிக்கு பக்கா ப்ளேயிங் 11 கூறிய ஹர்பஜன்.. அசுர பலம்!

அமீரகம்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக சூப்பர் ப்ளேயிங் 11- ஐ பரிந்துரைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தற்போது கடும் நெருக்கடியான சூழல் நிலவுகிறது.

பாகிஸ்தானுடன் தோல்வியடைந்ததால் அடுத்ததாக நியூசிலாந்தை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். இந்த போட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11-ல் முக்கிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பேட்டிங்கில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வித்தியாசமான ப்ளேயிங் 11-ஐ முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் அட்வைஸ்

ஹர்பஜன் சிங் அட்வைஸ்

இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய அணியின் தொடக்கம் பெரியளவில் சொதப்பி வருகிறது. எனவே ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷான் ஓப்பனிங் ஆட வேண்டும். அவர் மட்டும் தொடக்க வீரராக களமிறங்கினால் 6 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 40 - 50 ஆக இருக்காது. 60 - 70 என வலுவாக இருக்கும். இஷான் போன்ற பேட்ஸ்மேன் ஓப்பனிங்கில் இருந்தால், எப்படிபட்ட பவுலரும் பிரஷரில் இருப்பார்.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

முதல் விக்கெட்டிற்கு கேப்டன் விராட் கோலி, 2வது விக்கெட்டிற்கு கே.எல்.ராகுல் விளையாட வேண்டும். இப்படி களமிறக்கினால் இந்திய அணியின் முதல் 4 விக்கெட்கள் பலமாகும். 5வது வீரராக ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

Recommended Video

T20 World Cup 2021 : Ind Vs NZ இந்திய அணி வென்றதே இல்லை | Oneindia Tamil
 ஹர்திக்கின் நிலை

ஹர்திக்கின் நிலை

ஹர்திக் பாண்ட்யா வேண்டுமா என்ற குழப்பத்திற்கு பதிலளித்த அவர், 6வது வீரராக ஹர்திக் தான் விளையாட வேண்டும். அவருக்கான நாள் அமைந்தால் எதிரில் எப்படிபட்ட பவுலரையும் அடித்து நொறுக்கிவிடுவார். அவர் பந்துவீசவில்லை என்றாலும் பேட்டிங்காவது செய்ய வேண்டும். மிகவும் கடினமான நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்வார். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வது சுலபம். ஆனால் 5வது விக்கெட்டிற்கு களமிறங்கினால் முதல் பந்து முதலே அடித்து ஆட வேண்டும். அப்படிபட்ட வீரர் தான் ஹர்திக் பாண்ட்யா.

பவுலிங் தேர்வு

பவுலிங் தேர்வு

பாண்ட்யாவுக்கு அடுத்ததாக 7வது வீரராக ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் 8வது வீரராகவும் இருந்தால் சிறப்பாக இருக்கும். இதனால் பேட்டிங் ஆழம் பெரிதாக இருக்கும். 9வது வீரராக ஜஸ்பிரித் பும்ரா, 10 வது வீரராக முகமது ஷமி மற்றும் 11வது வீரராக வருண் சக்கரவர்த்தி களமிறங்க வேண்டும். ஒரு போட்டியில் வருண் சொதப்பியிருக்கலாம். ஆனால் அவரின் ஆட்டத்தை இனிமேல் தான் பார்ப்பீர்கள் என ஹர்பஜன் கூறினார்.

Story first published: Friday, October 29, 2021, 23:30 [IST]
Other articles published on Oct 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+