For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே இரவில் நடந்த அதிசயம்.. இந்திய அணிக்கு 6வது பவுலர் ரெடி.. நியூசி, போட்டிக்கு பலமான ப்ளேயிங் 11!

அமீரகம்: இந்திய அணிக்கு 6வது பந்துவீச்சாளர் ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை இந்திய அணி தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு காரணம் பாகிஸ்தானுடனான தோல்வி தான்.

இந்தியா டீம்ல இவங்க 3 பேர தூக்கிட்டு.. அவங்கள கொண்டு வாங்க.. இல்லைனா மூட்ட கட்ட வேண்டியது தான்இந்தியா டீம்ல இவங்க 3 பேர தூக்கிட்டு.. அவங்கள கொண்டு வாங்க.. இல்லைனா மூட்ட கட்ட வேண்டியது தான்

பேட்டிங்கில் முதலில் ஆடிய இந்திய அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பேட்ஸ்மேன்கள் மீது அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக டாப் ஆர்டர் மிக மோசமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தோல்விக்கு இந்தியாவின் பந்துவீச்சும் முக்கிய காரணம். 150 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இந்திய பவுலர்களால் எடுக்க முடியவில்லை.

சிரமப்பட்ட கோலி

சிரமப்பட்ட கோலி

இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜடேஜா என நட்சத்திர பவுலர்கள் இருந்தனர். ஆனால் 6வது பவுலர் இல்லாதது கோலியின் கைகளை கட்டிப்போட்டது போன்று ஆனது. ஏதாவது ஒருவிக்கெட்டையாவது கைப்பற்ற கோலி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பாத்தார். ஆனால் அவரிடம் பயன்படுத்த 6வது வீரர் இருந்திருந்தால், ஏதேனும் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கலாம்.

Recommended Video

Ind Vs NZ வாழ்வா சாவா போட்டியில் Newzealand அணிக்கு பின்னடைவு | Oneindia Tamil
பந்துவீச்சு

பந்துவீச்சு

ஆட்டத்தின் போது திடீர் திருப்பங்களை கொண்டு வர 6வது பவுலர் தேவை என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஹர்திக் பாண்ட்யா பந்துவீசாமல் இருப்பதால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட வேண்டும் எனக்கோரப்பட்டது. இந்நிலையில் அதற்கான நற்செய்தி கிடைத்துள்ளது.

6வது பவுலர் ரெடி

6வது பவுலர் ரெடி

நேற்று இரவு ஹார்திக் பாண்ட்யாவுக்கு பிட்னஸ் டெஸ்ட் நடத்தப்பட்டது. அப்போது அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து பயிற்சியின்போது பந்துவீச அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதும் சிறப்பாக பந்துவீசினார். உடல் அளவில் எந்தவித பிரச்னைகளும் அவருக்கு இல்லை எனத் தெரிகிறது. எனவே அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நிச்சயம் குறைந்தது 2 ஓவர்களாவது ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - நியூசிலாந்து போட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி நடைபெறுகிறது.

Story first published: Friday, October 29, 2021, 11:20 [IST]
Other articles published on Oct 29, 2021
English summary
Hardik Pandya Bowling Status Updates in Tamil : Indian all-rounder started bowling practice and he in full fitness. Fans Happy that 6th bowler ready for team India head of ICC T20 World Game against New Zealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X