For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை தொடர் - அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் யார்? ஒவ்வொரு தொடரிலும் யார் முதலிடம்?

மும்பை : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை 7 முறை டி20 உலககோப்பை நடந்துள்ளது.

இதில் இந்தியா ஒரு முறை மட்டும் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் யார் என்பதை தற்போது காணலாம்.

டி20 உலககோப்பை பொறுத்தவரை அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

டாப் ஸ்கோர்

டாப் ஸ்கோர்

2007ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது அந்த தொடரில் கம்பீர் 227 ரன்களை விளாசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு டி20 உலககோப்பை தொடரில் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு செல்லவில்லை. இந்த தொடரில் யுவராஜ் சிங் 153 ரன்களை அடித்துள்ளார்.

ரெய்னா சதம்

ரெய்னா சதம்

இதே போன்று 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சூப்பர் 6 சுற்றுடன் வெளியேறியது. இதில் ரெய்னா 219 ரன்களை அடித்துள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும். 2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்தியா அரையிறுதி செல்லவில்லை. அதில் விராட் கோலி 185 ரன்களை அடித்திருக்கிறார்.

விராட் கோலி சாதனை

விராட் கோலி சாதனை

2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. இதில் விராட் கோலி 319 ரன்களை விளாசினார். ஒரு டி20 உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை கோலியின் கைவசமே உள்ளது.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

2016ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் விராட் கோலி 273 ரன்களை அதிகபட்சமாக விளாசினார். அந்த தொடரில் அதிகபட்சமான ஸ்கோரும் அது தான். அந்த தொடரில் இந்தியா அரையிறுதி ஆட்டம் வரை சென்றது. 2021ஆம் ஆண்டு டி20 உலககோப்பை தொடரில் ராகுல் 194 ரன்கள் எடுத்தார். இதில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றிலேயே வெளியேறியது.

Story first published: Friday, October 14, 2022, 18:39 [IST]
Other articles published on Oct 14, 2022
English summary
T20 world cup history – Most runs by an indian batsman in every tournament
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+