For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை: ஒவ்வொரு தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் பட்டியல்

மும்பை: ஐசிசி ஆடவருக்கான டி20 உலகக் கோப்பையின் பத்தாவது சீசன், நடப்பாண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடர், 2007-ல் தென் ஆப்பிரிக்காவில் ' முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை நடந்த ஒன்பது தொடர்களில் ஆறு வெவ்வேறு உலக முன்னணி அணிகள் கோப்பையை வென்றுள்ளன.

இதுவரை ஒரே அணி தொடர்ந்து 2 முறை டி20 கோப்பையை வென்றது இல்லை. இதே போல் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் எந்த அணியும் வென்றது இல்லை. மேலும் 3வது முறையாக இதுவரை டி20 உலககோப்பையை வென்றது இல்லை. தற்போது இந்த 3 வரலாற்றையும் திருத்தி எழுதும் வாய்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடர் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்தியத் தீவுகள் (2010), இலங்கை (2012), வங்கதேசம் (2014), இந்தியா (2016), ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் (2021), ஆஸ்திரேலியா (2022), மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா (2024) ஆகியவை கடந்த கால தொடர்களை நடத்தியுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலககோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது. 2009ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவையும், இறுதிப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்தது.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. 2012-ல் இலங்கையில் நடைபெற்ற தொடரில், மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன்களும், சாம்வேல் பத்ரி மற்றும் சுனில் நரைன் என்ற சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தினர்.

2012-ல் சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் தோற்ற இலங்கை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டாக்காவில் நடைபெற்ற பைனலில் இந்தியாவிற்கு எதிராக வெற்றியைப் பெற்றது. இறுதிப் போட்டிக்கு முன் தொடர்ந்து ஐந்து வெற்றிகளைப் பெற்றிருந்த இந்திய அணி, மிகவும் முக்கியமான தருணத்தில் மோசமாகத் தடுமாறியது. 2016-ல்,இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி மீண்டும் சாதனை படைத்தது.

இந்தத் தொடர் அதன் பிறகு ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் மீண்டும் நடைபெற்றது. ஆஸ்திரேலியா பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இந்த கோப்பையை வென்றது. 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் பைனலில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக, தோல்வியின் வாயிலில் இருந்து இந்திய அணி வெற்றியைத் தட்டிச் சென்றது.

Story first published: Wednesday, February 4, 2026, 12:36 [IST]
Other articles published on Feb 4, 2026
English summary
This article reviews the T20 World Cup's history, noting co-hosts, champions, and evolving formats. It traces how the ICC event has grown in competition and prestige, highlighting notable w ins and the countries that have shaped its legacy in global cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+