Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 உலகக்கோப்பை வில்லனே விராட் கோலிதான்.. செமி ஃபைனலில் வைத்த ஆப்பு.. என்ன நடந்தது?

மும்பை : 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்தது. அப்போது குரூப் சுற்றில் தான் ஆடிய 6 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியை மட்டுமே அடைந்து முதல் இடத்தில் இருந்தது.

பின்னர் அரை இறுதியில் இங்கிலாந்து அணியை சந்தித்தது. அடிலெய்டு மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது எவ்வளவு ஸ்கோர் எடுக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் ஆடியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா ரன் குவிக்க முடியாமல் திணறினார். அவர் 28 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024


மூன்றாம் வரிசையில் களம் இறங்கிய விராட் கோலி சற்று நிதானமாகவே ரன் சேர்த்தார். அவருக்கு பின் வந்த சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 14 ரன்களும், ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களும் சேர்த்தனர். ஆனால் விராட் கோலி 18 ஆவது ஓவர் வரை களத்தில் நின்று இருந்த போதும், மிகவும் நிதானமாக ரன் சேர்த்தார். 40 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 125 ஆக இருந்தது.

ரோஹித் சர்மா ஒழுங்காக பேட்டிங் செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் 18-வது ஓவர் வரை களத்தில் நின்ற விராட் கோலி நிதானமாக ஆடியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த அடிலெய்டு மைதானத்தில் அந்த ஸ்கோர் போதவில்லை.

அது மட்டும் இன்றி இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 16 ஓவர்களிலேயே இந்த இலக்கை எட்டினர். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை அடைந்தது. ஒருவேளை இந்திய அணி 200 ரன்கள் எடுத்து இருந்தால், நிச்சயம் இங்கிலாந்து அணி அழுத்தத்தில் சில விக்கெட்களை இழந்து தடுமாறி இருக்கும். இந்திய அணிக்கும் வெற்றிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.

அந்த வகையில் அப்போது விராட் கோலி மீது கடும் விமர்சனம் எழுந்தது. அதே சமயம் 2002 டி20 உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர் விராட் கோலி தான். அவர் 6 இன்னிங்ஸ்களில் 296 ரன்கள் குவித்து இருந்தார். ஆனால், ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் பார்க்கும்போது அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் அவர் 136 ஸ்ட்ரைக் ரேட் உடன் 34-வது இடத்தில் தான் இடம் பிடித்தார்.
Story first published: Saturday, June 1, 2024, 23:30 [IST]
Other articles published on Jun 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+