Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவம் இந்தியா.. நெருக்கடிக்கு நடுவே ஆட வேண்டும்: வம்பிழுக்கும் வக்கார் யூனிஸ்

கொல்கத்தா: உலக கோப்பை டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை விட இந்தியாவுக்குதான் நெருக்கடி அதிகம் என்று, பாக். அணி பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-10 சுற்றில் இன்று இந்தியா-பாக். அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பலப் பரிட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வக்கார் யூனிஸ் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் வெற்றிகள்

இந்தியாவின் வெற்றிகள்

உலக கோப்பை டி20 தொடர்களில், இந்தியாவை, பாகிஸ்தான் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் வரலாறு மாற்றப்பட வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி தன்னம்பிக்கையோடு உள்ளது.

வெளியேற வேண்டும்

வெளியேற வேண்டும்

இந்திய அணியை பொறுத்தளவில், இப்போட்டியில் தோற்றால், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்திய அணி மிகுந்த நெருக்கடிக்கு நடுவே இப்போட்டியை எதிர்கொள்கிறது. இது, பாகிஸ்தான் அணிக்கு பலமாகும்.

பாக்.கிற்கு தன்னம்பிக்கை

பாக்.கிற்கு தன்னம்பிக்கை

வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றி எங்களுக்கு தன்னம்பிக்கையை தந்துள்ளது. எனவே இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை அணி வீரர்களுக்கு உள்ளது.

நெருக்கடி

நெருக்கடி

கடைசி போட்டியில் (நியூசிலாந்துக்கு எதிராக) இந்தியா தோற்ற நிலையில், இந்திய அணி மிகுந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதேநேரம் நாங்கள் கடந்த போட்டியில் வெற்றி பெற்று நெருக்கடியில்லாமல் விளையாட போகிறோம்.

பாகிஸ்தான் ஃப்ரீ

பாகிஸ்தான் ஃப்ரீ

வழக்கமாக பாகிஸ்தான் மீதுதான் நெருக்கடி ஏற்றப்பட்டிருக்கும். இம்முறை இந்தியா அந்த நெருக்கடியில் உள்ளது. அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால் இந்திய வீரர்கள் கடுமையான நெருக்கடியில்தான் இருப்பார்கள்.

ஆரோக்கிய போட்டி

ஆரோக்கிய போட்டி

இந்தியா-பாகிஸ்தான் நடுவே போட்டி இருந்தாலும் அது ஆரோக்கியமானதாகவே இருக்க வேண்டும். கடந்த 50 வருடங்களாக இவ்விரு நாடுகளும் விளையாடிய ஆட்டங்கள், இவ்விரு நாடுகளை தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கே ஒரு விருந்துதான்.

பெருமை

பெருமை

எனக்கு தெரிந்து வேறு எந்த நாட்டு மோதலும், இந்தியா-பாகிஸ்தான் மோதலை போல பரபரப்புடன் பார்க்கப்படுவதில்லை. இதற்காக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

பலே பந்து வீச்சாளர்கள்

பலே பந்து வீச்சாளர்கள்

பாகிஸ்தானிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஒரு ஸ்பெல் அல்லது ஒரு ஓவரில் ஆட்டத்தை மாற்றக்கூடிய திறமைசாலிகள் அவர்கள். கொல்கத்தா பிட்ச் சிறப்பாக உள்ளது. இங்கு அதிகப்படியான ரன் குவிக்க விரும்புகிறோம்.

Story first published: Saturday, March 19, 2016, 13:42 [IST]
Other articles published on Mar 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+