Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'இனி யார் வந்தாலும் அடிதூள் தான்..' அசுர ஃபார்மில் இந்தியா... ஆனாலும் அடுத்த சுற்று கனவு நிறைவேறுமா?

துபாய்: நேற்றைய போட்டியில் வெறும் 39 பந்துகளில் இலக்கை எட்டி அசூர ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்தியா. இருந்த போதிலும், ஆப்கன் vs நியூசிலாந்து போட்டியே இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதாக உள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் 12 சுற்றில் முதலில் தட்டுத்தடுமாறிய இந்திய அணி, தற்போது சூப்பர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்குச் சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது.

மோசமான தொடக்கம்

மோசமான தொடக்கம்

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பலம் வாய்ந்த இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டார். விராட் கோலியும் இதுதான் டி20இல் தான் கேப்டனாக இருக்கும் கடைசி தொடர் என அறிவித்துவிட்டார். இதனால் இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், இந்தியாவுக்குத் தொடக்கம் மிக மோசமாகவே இருந்தது.

பாக் போட்டி

பாக் போட்டி

சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை கடந்த அக். 14ஆம் தேதி எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 151 ரன்களை குவித்தது. அடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் மிக எளிதாக 152 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்பது இதுவே முதல் முறையாகும்.

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி

அடுத்த போட்டியில் இந்திய அணி கடந்த அக். 31ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் நியூசிலாந்து அணியின் அட்டகாசமான பவுலிங்கில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. குறிப்பாக 7ஆவது ஓவரில் தொடங்கி 16ஆவது ஓவர் வரை இந்தியாவால் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை. இந்திய அணியில் எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்த இந்தியாவால் 110 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து வந்த நியூசிலாந்து வீரர்கள் இந்திய பவுலிங்கை வெளுத்து வாங்கினர். வெறும் 15 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி 111 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

முதல் வெற்றி

முதல் வெற்றி

இதனால் அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா மிகப் பெரியளவில் வென்றாக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. இந்தச் சூழலில் நவ. 3ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு வழியாக ஃபார்முக்கு திரும்பியது. தொடக்க வீரர்கள் அனைவரும் வெளுத்து வாங்க இந்தியா 20 ஓவர்களில் 210 ரன்களை குவித்தது. அடுத்து வந்த ஆப்கனால் 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இருந்தாலும் அப்போதும் இந்திய அணியின் ரன்ரேட் சற்று மோசமாகவே இருந்தது.

ஊதி தள்ளிய இந்தியா

ஊதி தள்ளிய இந்தியா

இந்தச் சூழலில் தான் ஸ்காட்லாந்தை இந்திய அணி நேற்று எதிர்கொண்டது. நேற்றைய போட்டியில் ஸ்காட்லாந்தை இந்தியா ஊதிதள்ளிவிட்டது என்றே சொல்லாம். முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது. ஷமி, மற்றும் ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்த களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் ருத்திர தாண்டவம் ஆடினர். குறிப்பாக, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் வெறும் 19 ரன்களில் அரைசதம் அடித்தார். இந்தியா வெறும் 6.3ஓவர்களில், அதாவது 39 பந்துகளில் இலக்கை எட்டி சாதனை படைத்தது.

அட்டகாசமான ஃபார்ம்

அட்டகாசமான ஃபார்ம்

இந்த உலக கோப்பை தொடரை இந்தியா மோசமாகத் தொடங்கினாலும் கூட இப்போது பழைய பன்னீர்செல்வமாக அட்டகாசமான ஃபார்முக்கு திரும்பியுள்ளது. இந்தியாவின் பிளேயிங் 11 இப்போது தான் செட் ஆகியுள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்தியா வெறித்தனமாகன ஃபார்மில் உள்ளதால், அடுத்து வரும் போட்டியிலும் இந்தியா எளிதாக வெல்லும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதுமட்டுமின்றி, அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேறும்பட்சத்தில் எதிர் அணிகளை இந்தியா ஊதி தள்ளிவிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்,

Story first published: Saturday, November 6, 2021, 20:38 [IST]
Other articles published on Nov 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+