Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மீண்டும் அதே பிரச்னை” இந்தியா - ஆஃப்கான் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்..கடைசி நம்பிக்கையும் உடையுமா?

அமீரகம்: இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் தெரியவந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று ஆஃப்கானிஸ்தானுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா - ஆஃப்கானிஸ்தான்

இந்தியா - ஆஃப்கானிஸ்தான்

இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாகும். இந்திய அணிக்கு ஏதேனும் அதிர்ஷ்டம் நடந்தால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லலாம். ஆனால் அதற்கு அடுத்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதே போல ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும்.

 பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் இந்த முக்கியமான போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் தெரியவந்துள்ளது. போட்டி நடைபெறும் அபுதாபி மைதானம் பேட்டிங், பவுலிங் என இரண்டிற்குமே சமநிலையில் உதவக்கூடிய ஒன்று. இங்கு ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தலாம். இதே போல டெத் ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எடுபடும். முதல் 10 ஓவர்களுக்குள் ரன்ரேட்டை அதிகப்படுத்த பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு இருக்கும்.

டாஸ் வென்றால்?

டாஸ் வென்றால்?

இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 145 ஆக உள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கு 2வதாக பேட்டிங் செய்யும் அணிதான் அதிகப்படியான வெற்றிகளை குவித்துள்ளது. இங்கு இதுவரை 55 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 24 போட்டிகளை முதலில் பேட்டிங் செய்த அணியும், 31 போட்டிகளை 2வதாக பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இதே போல் போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதால் நேரம் போக போக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முதலில் பந்துவீசுவதே சரியான தேர்வாக இருக்கும்.

இந்திய அணிக்கு பின்னடைவு

இந்திய அணிக்கு பின்னடைவு

இந்த போட்டியில் இந்திய அணிக்கு சில பின்னடைவுகளும் இருக்கிறது. அதாவது அமீரக களத்தை பொறுத்தவரை ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அனுபவமிக்கது. இதுமட்டுமல்லாமல் இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளும் துபாயில் நடைபெற்றவை. முதல்முறையாக அபுதாபியில் ஆடுகிறது. ஆனால் இதே மைதானத்தில் தான் ஆஃப்கானிஸ்தான் அணி நமிபியாவை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனவே இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Wednesday, November 3, 2021, 19:19 [IST]
Other articles published on Nov 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+