Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ-ன் ஸ்பெஷல் ஏற்பாடு.. இந்தியா - நியூசி, ஆட்டம் அதிரடியா.. லோ ஸ்கோரா? பிட்ச் ரிப்போர்ட் என்ன?

அமீரகம்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் தோல்வியை சந்தித்த இந்திய அணி இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? போட்டியாக பார்க்கப்படுகிறது.

சிக்கலில் சிக்கிய இந்தியா

சிக்கலில் சிக்கிய இந்தியா

மொத்தமுள்ள 12 அணிகளையும் இரு குரூப்களாக பிரித்து சூப்பர் 12 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிதான் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. ரன் ரேட்டும் அடி வாங்கியது. எனவே மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி கண்டால் தான் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

அந்தவகையில் இன்று மிகவும் பலமான நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்க்கிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஐசிசி நடத்திய கடந்த சில தொடர்களில் நியூசிலாந்து தான் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது. எனவே இந்த முறையும் அதே நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இதனை எதிர்க்க இந்தியா தயாராகி உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பிட்ச் தகவல்

பிட்ச் தகவல்

இந்நிலையில் இரு அணிகளும் மோதவுள்ள துபாய் பிட்ச்-ன் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. துபாய் மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக பார்க்கப்படுகிறது. அதுவும் இன்று நல்ல அதிக ஸ்கோர் ஆட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் பிட்ச் தயாராக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு நேரத்தில் ஆட்டம் நடைபெறுவதால் பனியின் தாக்கம் காரணமாக பவுலர்கள் சரியான லைனில் வீச சிரமப்படுவார்கள்.

டாஸில் வெற்றி பெற்றால்?

டாஸில் வெற்றி பெற்றால்?

இந்த மைதானத்தை பொறுத்தவரை டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே சிறந்தது. ஏனென்றால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெரியளவில் பனிப்பொழிவு இருக்காது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்கள் முன்கூட்டியே விக்கெட்டுகளை எடுத்துவிடலாம். பின்னர் 2வதாக பேட்டிங் செய்யும் போது, பனி பொழிவால் பந்துவீச்சில் சிரமம் இருக்கும். பந்து பெரியளவில் வழுக்கும் என்பதால் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

சராசரி ஸ்கோர்

சராசரி ஸ்கோர்

துபாய் மைதானத்தை பொறுத்தவரை இதுவரை 67 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 34 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. 32 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சாரசரி ஸ்கோர் 143 ஆகும். 2வதாக ஆடும் அணியின் சராசரி ஸ்கோர் 123 ஆகும். இதனால் இன்றைய போட்டி எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Sunday, October 31, 2021, 17:17 [IST]
Other articles published on Oct 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+