For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம சாம்பியன்களை எப்போது பார்ப்போம்? பார்படாசில் சிக்கிக் கொண்ட இந்திய அணி.. விமான நிலையம் மூடல்

பார்படாஸ் : 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பை வென்று சாதனை படைத்த இந்திய அணியை வரவேற்பதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதற்காக ஸ்பெஷல் ஏற்பாட்டை பிசிசிஐ செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பார்படாசலிருந்து நியூயார்க் புறப்பட்டு அங்கிருந்து துபாய் வருவதாகவும், துபாயிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு வர வீரர்கள் இருப்பதாகவும் முதலில் அட்டவணை தயாரிக்கப்பட்டது.

t20 world cup india cricket team

ஆனால் தற்போது பார்படாஸ் அருகே அதி தீவிரப்புயல் மையம் கொண்டு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த புயல் காரணமாக டி20 உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டமே நடைபெறாது என்ற அளவுக்கு சிக்கல் இருந்தது. ஆனால் எப்படியோ மழை குறிக்கிட்டு இல்லாமல் போட்டி நடந்து முடிந்து விட்டது.

ஆனால் தீவிர புயலானது ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை காலை தாக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் பார்படாஸ் விமான நிலையமும் புயல் காரணமாக மூடப்பட்டிருக்கிறது. பெரில் என்ற சூறாவளி பார்பிடாசை தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் ஹில்டனில் தஞ்சம் அடைந்து சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு ஆபத்தும் இருக்கின்றது. ஹோட்டல் ஹில்டன் என்பது கடற்கரையை ஒட்டி இருக்கின்றது. இதனால் புயல் தாக்கும் போது இந்திய வீரர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கலக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த புயல் காரணமாக இந்தியா திட்டமிட்டபடி திங்கட்கிழமை காலை புறப்படுவார்களா இல்லை பார்படாஸ் தீவிலே சிக்கிக்கொண்டு தாமதமாக இந்தியாவுக்கு வருவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

Story first published: Sunday, June 30, 2024, 23:57 [IST]
Other articles published on Jun 30, 2024
English summary
T20 World cup - Indian cricket team stranded in barbados due to cyclone நம்ம சாம்பியன்களை எப்போது பார்ப்போம்? பார்படாசில் சிக்கிக் கொண்ட இந்திய அணி.. விமான நிலையம் மூடல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+