Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-வங்கதேசம் மோதலை டிவியில் நேரடி வர்ணனை செய்கிறார் ஷாருக்கான்

பெங்களூர்: இந்தியா-வங்கதேசம் நடுவே இன்று நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரடி வர்ணனை செய்ய உள்ளார்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர்-10 ஆட்டத்தில் இன்று வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது. பெங்களூரில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

T20 World Cup IndiavsBangladesh match clash sees Shah Rukh Khan as commentator

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்கள் நடிகர் ஷாருக்கான் வர்ணனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளாராம். பாகிஸ்தானின் ஷோயிப் அக்தரும், நேரடி வர்ணனையாளர்களில் ஒருவராகும்.

2007ம் ஆண்டு, ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற முதலாவது டி20 உலக கோப்பை பைனல் போட்டியின்போதும் ஷாருக்கான் இதுபோல வர்ணனை செய்துள்ளார். அதில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்று உலக கோப்பையை வென்று அசத்தியது.

நடப்பு உலக கோப்பை தொடரில், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது, பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன், நேரடி வர்ணனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 23, 2016, 15:46 [IST]
Other articles published on Mar 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+