Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எல்லாத்துக்கும் ஒரு அளவு தான்”.. இந்திய அணியின் சொதப்பலுக்கு காரணம்.. கபில் தேவ் விளாசல் !

அமீரகம்: டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெளியேறியது குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் விளாசியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோசமான தோல்வியடைந்தது.

இதன் விளைவாக 3 வெற்றிகளை பெற்றிருந்தும் இந்திய அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியது.

வெளியேறிய இந்திய அணி

வெளியேறிய இந்திய அணி

மிக முக்கியமான இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மிதப்பில் நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டனர். அவர்களின் பாட்சா இங்கெல்லாம் பலிக்காது என மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

கபில் தேவ் விளக்கம்

கபில் தேவ் விளக்கம்

இந்நிலையில் இந்திய அணியின் சொதப்பல் குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் பேசியுள்ளார். அதில் அவர், டி20 உலகக்கோப்பை முடிவுக்கு வந்தது என நினைத்துவிடக்கூடாது. இந்திய அணியின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பைக்கான திட்டத்தை போட வேண்டும்.

வீரர்களின் முக்கியத்துவம்

வீரர்களின் முக்கியத்துவம்

என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் சிறிது இடைவெளி இருந்திருக்க வேண்டும். நமது நாட்டு வீரர்களுக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன. ஆனால் அவர்களால் அதனை சரியாக வெளிகாட்ட முடியவில்லை. தேசத்திற்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுத்தால் நாம் என்ன சொல்ல முடியும். நாட்டிற்காக விளையாடினால் தான் பெருமை.

பிசிசிஐ -ன் பொறுப்பு

பிசிசிஐ -ன் பொறுப்பு

வீரர்களின் குடும்ப சூழல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் ஐபிஎல் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே ஒரு எல்லை இருந்திருக்க வேண்டும். நான் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது எனக்கூறவில்லை. இதுபோன்ற விஷயங்களில் பிசிசிஐ தலையிட்டு தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என கபில் தேவ் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 8, 2021, 18:21 [IST]
Other articles published on Nov 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+