Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பந்து எங்கப்போச்சு..” ஸ்டார்க் வீசிய மின்னல் வேக யார்க்கர்.. அசந்துப்போய் நின்ற பேட்ஸ்மேன்- வீடியோ

அமீரகம்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ஃபீல்டிங் செய்து வெற்றி பெற்றது.

 சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பதும் நிசங்கா 7 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த அசலங்கா (35), குசல் பெரிரா (35) என வெளியேறினர். இறுதியில் ராஜபக்ச அதிரடியாக 33 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஏமாற்றமடைந்த இலங்கை

ஏமாற்றமடைந்த இலங்கை

இந்த போட்டியில் முதலில் இலங்கையின் பக்கமே காற்று வீசியது. அந்த அணியின் குசல் பெரேரா மற்றும் அசலங்கா ஆகியோர் 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து அசத்தினர். இதனால் 10 ஓவர்களில் இலங்கை அணி 80 ரன்களை கடந்தது. இப்படியே சென்றால் நிச்சயம் இலங்கை 190+ ரன்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் மிட்செல் ஸ்டார்க்.

ஆட்டத்தின் திருப்புமுணை

ஆட்டத்தின் திருப்புமுணை

குறிப்பாக ஸ்டார்க் வீசிய யார்க்கர் அனைவரையும் அசரவைத்தது. மிட்சல் ஸ்டார்க் வீசிய 10 ஓவரில் 2வது பந்தில் குசல் பெரேரா சிக்ஸருக்கு விளாசினார். வைட் திசையில் போடப்பட்ட பந்தை சாமர்த்தியமாக சிக்ஸருக்கு விரட்டினார். இதனால் அடுத்த பந்தில் சுதாரித்துக்கொண்ட மிட்செல் ஸ்டார்க் மிகவும் அற்புதமான யார்க்கர் ஒன்றை வீசினார்.

ஸ்டார்க்கின் யார்க்கர்

முந்தைய பந்தை விட சற்று வேகத்தை அதிகரித்த அவர், குசல் பெரேரா எதிர்பார்க்காத வகையில் கால்களுக்கு இடையே மிடில் ஸ்டம்பை கழட்டினார். அந்த பந்தை எப்படி தடுப்பது என்று குசல் பெரேரா யோசித்து முடிப்பதற்குள் விக்கெட் பறிபோனது. இந்த பந்துதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் (65), ஆரோன் ஃபின்ச் (37) ஆகியோர் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

Story first published: Friday, October 29, 2021, 18:03 [IST]
Other articles published on Oct 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+