Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அத செஞ்சாலே இந்தியா க்ளோஸ்”.. ட்ரெண்ட் போல்ட் எடுத்த சபதம்.. இந்திய அணியின் வீக் பாய்ண்ட் மீது குறி

அமீரகம்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் மிக முக்கிய போட்டியாக நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி நாளை இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தொடங்கவுள்ளது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

இரு அணிகளுக்குமே இந்த போட்டி வாழ்வா? சாவா? போராட்டமாக இருக்கப்போகிறது. பாகிஸ்தான் அணி இந்தியா, நியூசிலாந்து இரண்டு அணிகளையும் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. எனவே இந்த இரு அணிகளில் எந்த அணி வெல்கிறதோ, அவர்கள் தான் இரண்டாவது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

 நியூசி, திட்டம்

நியூசி, திட்டம்

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக புதிய சபதத்தை எடுத்துள்ளார் நியூசிலந்து வீரர் ட்ரெண்ட் போல்ட். அதாவது பாகிஸ்தான் பவுலர் சாஹீன் அஃப்ரிடியை செய்த அதே திட்டத்தை போல்ட்டும் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்திருந்தார் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அஃப்ரிடி.

ட்ரெண்ட் போல்ட் சபதம்

ட்ரெண்ட் போல்ட் சபதம்

அவர் வீசிய பந்தில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா டக் அவுட்டும், கே.எல்.ராகுல் 3 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர். இதுதான் இந்திய அணியின் அஸ்திவாரத்தையே உடைத்தது. இதுகுறித்து பேசியுள்ள ட்ரெண்ட் போல்ட், சாஹீன் அஃப்ரிடி பவுலிங் வீசிய விதம் அற்புதமாக இருந்தது. இந்திய அணியில் தரமான பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனால் வெகு சீக்கிரமாக விக்கெட் எடுக்க வேண்டும் என்பதையே பவுலிங் படை நினைக்கும். அந்தவகையில் சாஹீன் அஃப்ரிடி செய்த அதே விஷயத்தை நானும் செய்வேன்.

போல்ட் நம்பிக்கை

போல்ட் நம்பிக்கை

என்னை பொறுத்தவரை பிட்ச்-ல் சற்று ஸ்விங் இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் நாம் நினைத்ததை செய்யலாம். ஐசிசி தொடர்களில் கடந்த சில போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளோம். எனினும் அவர்களை குறைத்து மதிப்பிடாமல் நிச்சயம் வெற்றிகாக போராடுவோம் என ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 30, 2021, 21:26 [IST]
Other articles published on Oct 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+