Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அடப்போங்கய்யா”.. ரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய இந்தியா.. நியூஸி.யிடம் தோல்வி அடைய என்ன காரணம்?

அமீரகம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மீண்டும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங்கில் பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பினர்.

 சொதப்பிய இந்திய அணி

சொதப்பிய இந்திய அணி

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி மிக மோசமாக விளையாடி ஏமாற்றம் கொடுத்தது. ஆட்டத்தின் முதல் பந்து முதலே கடும் அழுத்தத்தில் இந்திய வீரர்கள் விளையாடினார்கள். இதன் விளைவாக, கே.எல்.ராகுல் 18 ரன்களுக்கும், இஷான் கிஷான் 4 ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதன் பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி (17) துணைக் கேப்டன் ரோகித் சர்மா (14) ரன்களுக்கும் நடையை கட்டினார்.

 எளிய டார்கெட்

எளிய டார்கெட்

அதிரடி காட்ட வேண்டிய ரிஷப் பண்ட் (12), ஹர்திக் பாண்ட்யா (23) என ஏமாற்றத்தையே கொடுத்தனர். இதனால் 97 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து இந்திய அணி பரிதாப நிலைக்கு சென்றது. கடைசி சில ஓவர்களில் ரவீந்திர ஜடேஜா தனி ஆளாக போராட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நம்பிக்கை விதைத்த பும்ரா

நம்பிக்கை விதைத்த பும்ரா

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கத்தில் ஒரு விக்கெட் சென்றது. ஜஸ்பிரித் பும்ரா 24 ரன்களில் ஒரு விக்கெட்டை எடுத்துக்கொடுத்து நம்பிக்கையை விதைத்தார். ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் டேர்லி மிட்செல் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி சென்றனர்.

படு தோல்வி

படு தோல்வி

35 பந்துகளை சந்தித்த மிட்செல் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் விளாசினார். மறுமுணையில் நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 30 ரன்கள் சேர்த்தார். இதனால் 14.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதி ரேஸில் பின் தங்கியுள்ளது.

அரையிறுதி வாய்ப்பு இருக்கா?

அரையிறுதி வாய்ப்பு இருக்கா?

ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்படி தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி 2 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி பெரிய வெற்றிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி அடுத்து வரும் 3 போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Sunday, October 31, 2021, 22:48 [IST]
Other articles published on Oct 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+