For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை- 8 ஆண்டுகளாக அரையிறுதியில் 3 பேர் தான் இந்தியாவுக்காக விக்கெட் எடுத்தவர்கள்

கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு அரை இறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் கடந்த முறை இங்கிலாந்திடம் அடைந்து தோல்வி இந்தியாவை இன்னும் மனதளவில் பாதிக்க செய்திருக்கிறது.

இதற்கு காரணம் கடந்த முறை இந்தியாவும் இங்கிலாந்தும் மோதிய போது இதில் ஒரு இந்திய பவுலர் கூட இங்கிலாந்து அணியின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்றே மூன்று இந்திய பவுலர்கள் தான் அரையிறுதி போட்டியில் டி20 உலக கோப்பையில் விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள்.

t20 world cup ind vs eng virat kohli

அதில் ஒருவர் ஓய்வு பெற்ற நிலையில் இரண்டு பேர் மட்டுமே தற்போது அணியில் இருக்கிறார்கள். இந்த இரண்டு பௌலர்களில் ஒருவர் மட்டும் பேட்ஸ்மேன் என்று சொன்னால் அது உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 0 ரன்கள் எடுத்தனர். இதில் இந்தியா சார்பாக புவனேஸ்வர் குமார் இரண்டு ஓவர்களில் 25 ரன்களும், தற்போதைய அணியில் இருக்கும் ஆர்ஸ்தீப் சிங் இரண்டு ஓவர்களில் 15 ரன்களும் அச்சர் பட்டேல் நான்கு ஓவர்களில் 30 ரன்ளும், முகமது சமி 3 ஓவர்களில் 39 ரன்களும் அஸ்வின் இரண்டு ஓவர்களில் 27 ரன்களும், ஹர்திக் பாண்டியா மூன்று ஓவர்களின் 34 ரன்களும் விட்டுக் கொடுத்தனர்.

இதில் ஒருவர் கூட ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு இந்திய அணி படுதோல்வி தழுவிய நிலையில் 2016 ஆம் ஆண்டு தான் இந்தியா அரையிறுதியில் விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 192 ரன்கள் எடுத்தது. இதில் விராட் கோலி 47 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதன் ஆடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்ததும் இதில் நெஹ்ரா நான்கு ஓவருக்கு 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், பும்ரா நான்கு ஓவருக்கு 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதில் விக்கெட் எடுத்த மூன்றாவது பவுலர் யார் என்று கேட்டால் நீங்களே ஷாக் ஆகிவிடுவீர்கள்.

அது விராட் கோலி தான். 1.4 ஓவர்களில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து கெயில் விக்கெட்டை விராட் கோலி சாய்த்தார். தற்போது விராட் கோலி,பும்ரா மட்டும் தான் விக்கெட் எடுத்து பிறகு மீண்டும் அரை இறுதியில் விளையாடுகிறார்கள். இந்த வீரர்களையும் தவிர மற்ற எந்த வீரரும் அரை இறுதியில் விக்கெட்டை டி20 உலக கோப்பையில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 27, 2024, 17:30 [IST]
Other articles published on Jun 27, 2024
English summary
T20 World cup - only 3 Indian cricketers took wickets in semi final for 8 years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+