For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி வரை பரபரப்பு.. பாகிஸ்தானை அலறவிட்ட ஆஃப்கானிஸ்தான்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் - விவரம்

அமீரகம்: கடும் போராட்டத்திற்கு பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அசத்தியுள்ளது

Recommended Video

T20 World Cup 2021: Asif Ali blitz, Babar take Pakistan to 5-wicket win over AFG | Oneindia Tamil

டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின.

அமீரக களத்தில் இரு அணிகளுமே மிகவும் பலமானதாக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியது.

டாஸ் வென்றும் பின்னடைவு

டாஸ் வென்றும் பின்னடைவு

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்து ஸ்காட்லாந்து அணியை வென்றது. எனவே அதே நம்பிக்கையுடன் மீண்டும் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அதுவே அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஏமாந்த ஆஃப்கானிஸ்தான்

ஏமாந்த ஆஃப்கானிஸ்தான்

முதலில் களமிறங்கிய ஆப்கான் அணியில் ஓப்பனிங் வீரர்கள் ஹஸ்ரதுல்லா (0), முகமது ஷெசாத் (8) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய குர்பாஸ், ஆஸ்கர் ஆப்கான் ஆகியோர் தலா 10 ரன்களுக்கும், கரீம் ஜனாத் (15), நஜிபுல்லா (22) ஆகியோர் நடையை கட்டினர். இதனால் 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஃப்கான் தடுமாறியது. இறுதியில் முகமது நபி (35), குல்பதீன் 35 என விளாச அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

எளிய இலக்கை துறத்திய பாகிஸ்தான் அணியில் ஓப்பனிங் வீரர் முகமது ரிஸ்வான் (8) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆஃப்கானிஸ்தான் முற்றிலும் ஸ்பின்னர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதால், பாகிஸ்தான் மிகவும் நிதானமாக ரன்களை சேர்த்தது. நிதானமாக ஆடி வந்த பக்கர் ஜமான் (30) ரன்களுக்கும், பாபர் அசாம் (51) ரன்களுக்கு வெளியேறினர்.

சவால் கொடுத்த ஆஃப்கான்

சவால் கொடுத்த ஆஃப்கான்

பின்னர் வந்த முகமது ஹஃபீஸ் (10), சோயிப் மாலிக் (19) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 17.5 ஓவர்களில் 124 ரன்களை மட்டுமே எடுத்து அந்த அணி தடுமாறியது. இதனால் கடைசி 12 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19 ஓவரை கமீர் ஜனாத் வீச, அதனை ஆசிஃப் அலி எதிர்கொண்டார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டு அசத்தினார். இதனால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அரையிறுதி

அரையிறுதி

இதற்குமுன் இந்தியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய பாகிஸ்தான் தற்போது 3வது வெற்றியை பதிவு செய்து டாப் இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக நமீபியா, ஸ்காட்லாந்து போன்ற அணிகளை எளிதாக வென்றுவிடும் என்பதால் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது.

Story first published: Saturday, October 30, 2021, 10:56 [IST]
Other articles published on Oct 30, 2021
English summary
Pakistan defeated Afghanistan by 5 wickets in Dubai Yesterday and have all but confirmed a semi-final spot with a total of 3 wins now in 3 matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+