பாகிஸ்தான் அணிக்குள் கொரோனா?.. 2 முக்கிய வீரர்களுக்கு உடல்நிலை பாதிப்பு.. செமி ஃபைனலில் குழப்பம்
அமீரகம்: பாகிஸ்தான் அணியில் 2 முக்கிய வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் அரையிறுதிப்போட்டியில் விளையாடுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது அரையுறுதி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்தவகையில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

2வது அரையிறுதி
லீக் சுற்றுகளில் யாராலும் அசைக்க முடியாத அணியாக பாகிஸ்தான் உருவெடுத்தது. விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி என அசத்தியது. குறிப்பாக இந்தியா, நியூசிலாந்து போன்ற பலமான அணிகளிடம் அபார வெற்றி பெற்றது. இதே போல குரூப் ஏ வில் ஆஸ்திரேலிய அணியும் அசைக்க முடியாத ஃபார்மில் இருக்கின்றனர். அந்த அணியி வார்னர், ஃபின்ச் என அனைவரும் ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். பவுலிங் ஸ்டார்க் மிகப்பெரும் பலமாக உள்ளார். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

வீரர்களின் உடல்நிலை மோசம்
இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது அந்த அணியின் முக்கிய வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் அரையிறுதியில் கலந்துக்கொள்வதில் சந்தேகம் நீடிக்கிறது. நேற்று காலை அவர்கள் தூங்கி எழுந்த போது லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. நேரம் போக போக காய்ச்சல் அதிகரித்ததால் அணி வீரர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை
இதனையடுத்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்தது அனைவருக்கும் நிம்மதியை தந்தது. எனினும் அவர்கள் இருவராலும் நேற்றைய நாள் முழுவதும் பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. இன்றும் காய்ச்சல் நீடித்து வருகிறது. இதனால் இன்று நடக்கும் ஆஸ்திரேலிய போட்டியில் இருப்பார்களா என்பது சந்தேகம் ஆகியுள்ளது. அவர்களுக்கு மாற்று வீரர்களாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, மற்றும் ஹைதர் அலி உள்ளனர்.

முக்கிய வீரர்கள்
இந்த தொடரில் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாமின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தான் எதிரணிகளை கலங்கடித்தது. இதே போல மிடில் ஆர்டரில் அணியின் தூணாக நின்று பிடித்து வருபவர் சோயிப் மாலிக். இதனால் இவர்கள் இருவரும் இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications