Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸில் தோற்றது இந்திய அணி.. எவ்வளவு இலக்கு வைத்தால் வெற்றி பெறலாம்.. எதிரே இருக்கும் பெரும் சிக்கல்!

அமீரகம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பரம எதிரிகள் மோதிக்கொள்வதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாஸில் இந்திய அணி வெல்ல தவறியுள்ளது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் நேற்றே அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து ஒரே ஒரு வீரர் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். ஹைதர் அலி நீக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியா ப்ளேயிங் 11

இந்தியா ப்ளேயிங் 11

இந்திய அணியை பொறுத்தவரை அனைவரும் எதிர்பார்த்த ஜோடிகளுடன் களமிறங்குகிறது. பேட்டிங்கில் டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் 4 வீரர்களுமே பயிற்சி போட்டியின் போது மிகச்சிறப்பான ஃபார்மில் இருந்தது தெரியவந்தது. ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா இணைக்கப்பட்டுள்ளனர். பாண்ட்யா இன்று குறைந்தது 2 ஓவர்களாவது வீசுவார் எனத் தெரிகிறது.

பவுலிங் படை

பவுலிங் படை

பந்துவீச்சை பொறுத்தவரையில் சீனியர் வீரர்களான புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சில் அஸ்வினா? வருண் சக்கரவர்த்தியா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடி வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்துள்ளார் விராட் கோலி.

எவ்வளவு இலக்கு தேவை

எவ்வளவு இலக்கு தேவை

இந்த போட்டியை பொறுத்தவரை டாஸ் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. முதலில் விளையாடி குறைந்தது 180+ ரன்கள் குவித்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Story first published: Sunday, October 24, 2021, 19:39 [IST]
Other articles published on Oct 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+