Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்க்காக நண்பரிடம் சண்டை போட்ட அஸ்வின்.. தடுத்து நிறுத்திய சிஎஸ்கே வீரர்.. என்ன நடந்தது?

சென்னை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு ரிஷப் பண்ட், ஒரு காரணமாக இருக்கின்றார். இந்திய அணிக்காக பல மாதங்களுக்குப் பிறகு விளையாடும் ரிஷப் பண்ட் தற்போது தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இது ரிஷப் பண்ட்க்கு கை கொடுக்கின்றது. அது மட்டுமல்லாமல் இந்திய அணியும் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த சூழலில் பண்ட் தேவையில்லாமல் ஒரு ஷார்ட் ஆடி ஆட்டம் இழப்பதாக கிரிக்கெட் விமர்சகர் பிரசன்னா குற்றம் சாட்டியுள்ளார்.

t20 world cup ind vs aus rishab pant

இது குறித்து அஸ்வின், உத்தப்பா ஆகியோர் கலந்து கொண்ட உரையாடலில் பேசிய பிரசன்னா நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் பண்ட், தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து ரிவர்ஸ் ஸ்வீப் செய்வதாக கூறியுள்ளார். கடந்த இரண்டு போட்டிகளில் ரிஷப் பன்ட் இவ்வாறு விளையாடி ஆட்டம் இழந்து வருவதாகவும் பிரசன்னா சாடியுள்ளார்.

இதனை பண்ட் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு உடனே மறுப்புக்குரிய அஸ்வின் ரன்கள் வேண்டுமென்றால் இது போன்ற ரிஸ்க் எடுக்க தான் வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இதுபோல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதை பண்ட் நிறுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார். இதற்கு பிரசன்னா மறுப்பு தெரிவித்தார். இந்த சூழலில் உள்ளே குறுக்கே புகுந்த ராபின் உத்தப்பா, ரிஷப் பண்ட் இதுபோல் அதிரடி காட்டுவதில் எந்த தவறும் இல்லை. எனினும் ரிஷப் பண்ட் போட்டியின் 13 அல்லது 15 வது ஓவர் வரை களத்தில் நிற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

13 வது ஓவர் வரை ரிஸ்க் எடுப்பதை குறைத்துக் கொண்டு கடைசி கட்டத்தில் ரிஸ்க்கான ஷார்ட்டுகளை ஆடி ரன்களை எடுத்தால் பிரச்சனை இல்லை என்றும் ராபின் உத்தப்பா கூறியுள்ளார். எனினும் இது குறித்து விளக்கம் அளித்த அஸ்வின், ஒவ்வொரு வீரரும் 20- 30 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்றும் எவ்வளவு குறைந்த பந்தில் அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அவ்வளவு இந்தியாவுக்கு நல்லது என்று குறிப்பிட்டார். மேலும் இது போன்ற அதிரடி ஆட்டத்தை வீரர்கள் ஆடும்போது விக்கெட்டுகள் விழ தான் செய்யும் என்று குறிப்பிட்ட அஸ்வின், டி20யின் இந்த புதிய பரிமாணத்திற்கு ரசிகர்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Monday, June 24, 2024, 19:08 [IST]
Other articles published on Jun 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+