Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாதான் வரலாற்றிலேயே வலிமையான டி20 அணி.. மறுக்கவே முடியாது.. புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்

மும்பை: சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி சமீபத்தில் 2026 டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் 2024 மற்றும் 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று கோப்பையை தக்கவைத்த முதல் அணி என்ற மகத்தான சாதனையை இந்தியா படைத்துள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் வலிமையான டி20 அணி இந்திய அணி தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மனதார பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 3 ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. மேலும், 2024 மற்றும் 2026 உலகக்கோப்பை தொடர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி ஒரு இருதரப்பு டி20 தொடரை கூட இழக்கவில்லை. நடப்பு தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்தாலும், அதிலிருந்து சற்றும் மனம் தளராமல் அபாரமாக மீண்டு வந்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

T20 World cup Ricky Ponting Labels Current Indian Squad as the Greatest T20 Side in Cricket History

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், தற்போதைய இந்திய டி20 அணியை வரலாற்றின் சிறந்த அணி என கூறுவதை யாராலும் மறுக்க முடியாது. உலகத்தரம் வாய்ந்த பல மேட்ச் வின்னர்கள் இந்த அணியில் உள்ளனர். டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்ல, கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் செயல்பாடு மிகவும் ஆச்சரியமளிக்கிறது என தெரிவித்தார்.

மேலும், இந்திய வீரர்களின் இந்த அசைக்க முடியாத ஆதிக்கத்திற்கு ஐபிஎல் தொடர் மிக முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இந்த வீரர்கள் தொடர்ந்து விளையாடி பெற்ற அனுபவம் மிகப்பெரியது. ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியும் சர்வதேச போட்டிக்கு இணையான அழுத்தத்தை தரக்கூடியது. அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளை கையாண்ட அனுபவத்துடன் மிகச் சிறந்த சமநிலை கொண்ட அணியாக இந்திய அணி களமிறங்கி தொடர்ந்து சாதித்து வருகிறது என ரிக்கி பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

2000மாவது ஆண்டு முதல் 2010 வரை ஆஸ்திரேலிய அணி உலகின் அசைக்க முடியாத ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியாக இருந்தது. அப்போது பெரும்பலான ஆண்டுகள் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டார். மேலும், உலகின் சிறந்த கேப்டன்கள் வரிசையில் ரிக்கி பாண்டிங் நிச்சயம் முதல் மூன்று இடங்களுக்குள் எப்போதும் இடம் பெறுபவர். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் தற்போதைய இந்திய டி20 அணியே உலகின் வலிமையான அணி எனக் கூறி இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Tuesday, March 17, 2026, 7:50 [IST]
Other articles published on Mar 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+