Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டநாயகன் விருதுக்கு கோலி தகுதியே இல்லை.. பவுலர்கள் கோலியை காப்பாற்றி விட்டனர் -சஞ்சய் மஞ்சுரேக்கர்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது. இதில் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விராட் கோலி முதல் 30 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

ஆனால் அதன் பிறகு தான் விராட் கோலி அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் இறுதிப்போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றார். இதனால் விராட் கோலிக்கு ஆட்ட நாய்கள் விருது வழங்கப்பட்டது.

t20 world cup india cricket team virat kohli

இந்த நிலையில் விராட் கோலியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையாக சாடிருக்கிறார். ஆட்ட நாயகன் விருதுக்கு தகுதியே இல்லாதவர் விராட் கோலி என்றும் அவர் காட்டமாக பேசியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விராட் கோலி அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவால் வெறும் இரண்டு பந்துகள் தான் எதிர்கொள்ள முடிந்தது.

முதலில் இந்தியா நன்றாக தான் விளையாடியது என்று எனக்கு தோன்றியது. ஆனால் விராட் கோலியின் இந்த ஆட்டம் மூலம் இந்தியா நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டதாக நான் நினைக்கின்றேன். பவுலர்கள் இல்லையென்றால் நிச்சயம் நான் சொன்னது சரியாக இருந்திருக்கும். இந்தியா நிச்சயம் தோற்கும் நிலையில் தான் இருந்தது.

தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 90 சதவீதம் வாய்ப்பு இருந்தது. ஆனால் பவுலர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் விராட் கோலியையும் அவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். ஏனென்றால் விராட் கோலி இந்தியாவின் பாதி இன்னிங்ஸ் மேல் விளையாடி வெறும் 128 தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

நானாக இருந்தால் நிச்சயம் பவுலருக்கு தான் ஆட்ட நாயகன் விருதை கொடுத்திருப்பேன். ஏனென்றால் அவர்கள் தான் தோல்வியின் பிடியிலிருந்து இந்திய அணியை காப்பாற்றி வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்கள் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் விமர்சித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பேசிய ஜிம்பாப்வே வீரர் ஆண்டி பிளவர் இந்தியா மட்டும் இறுதி போட்டியில் தோற்று இருந்தால் நிச்சயம் விராட் கோலி கடும் விமர்சனங்களை சந்தித்து இருப்பார் என்று கூறியுள்ளார்.

Story first published: Monday, July 1, 2024, 20:12 [IST]
Other articles published on Jul 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+