For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எது? முன்னாள் இந்திய வீரர்கள் கணிப்பு

மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் எட்டாம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக களமிறங்க உள்ளது.

கடந்த தொடரை போலவே இம்முறையும் 20 அணிகள் பங்கு பெற்றுள்ளது. இந்த சூழலில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

அரை இறுதி கணிப்பு குறித்து வெளியிட்டுள்ள ராபின் உத்தப்பா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இந்தியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று முன்னாள் வீரரான புஜாரா, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெரும் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஆகாஷ் சோப்ரா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெறும் எனக் கூறியுள்ளார். இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரரான முஹமது கையிப், இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெரும் என கூறியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெரும் என கணித்துள்ளார். முன்னாள் பயிற்சியாளர் ஆன சஞ்சய் பங்கர், இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். இதில் அனைத்து வீரர்களுமே இந்திய அணியை குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 3, 2026, 14:42 [IST]
Other articles published on Feb 3, 2026
English summary
Former cricketers predict the likely semi final teams for the T20 World Cup, with India repeatedly featured as a leading contender alongside Australia, England, and New Zealand. The projections reflect confidence in India’s current form and past performances across the season.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+