Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கிண்டல் பண்றாங்க பரமா” இந்திய வீரர்கள் குறித்து அஃப்ரிடி செய்த விஷயம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

அமீரகம்: போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் சாஹீன் அஃப்ரிடி இந்திய வீரர்களை அவுட்டாக்கியது குறித்து கிண்டலடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Afridi Imitates Kohli, Rohit and Rahul’s Dismissal | OneIndia Tamil

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது.

இந்த முறை கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு கூட செல்லாமல் வெளியேறியது.

படு தோல்வி

படு தோல்வி

குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டரை ஒட்டுமொத்தமாக சரித்து வெற்றிக்கு வித்திட்டவர் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அஃப்ரிடி. அவர் வீசிய பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபள்யூ ஆனார். பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலியை க்ளீன் போல்ட் எடுத்தார். இதனால் எளிய இலக்கை துரத்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

அரையிறுதி வாய்ப்பு

அரையிறுதி வாய்ப்பு

இந்த வெற்றிக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் விடாப்பிடியான நம்பிக்கையை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்த தொடரின் லீக் போட்டிகளில், பாகிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளிலும் ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இன்று அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது.

சாஹீனின் கிண்டல்

சாஹீனின் கிண்டல்

இந்நிலையில் லீக் போட்டியின் போது சாஹீன் அஃப்ரிடி செய்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் போது பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்த சாஹீன் அஃப்ரிடியிடம் இந்திய அணி டாப் ஆர்டரை விக்கெட் எடுத்த விதத்தை செய்து காட்ட கூறினார்கள். இதனையடுத்து அவரும் அதனை நிறைவேற்றினார்.

கோலியின்

கோலியின்

முதலில் ரோகித் சர்மாவின் எல்.பி.டபள்யூ விக்கெட்டை செய்கையின் மூலம் காட்டினார். இதன் பின்னர் கே.எல்.ராகுலின் விக்கெட்டை செய்து காட்டிய அவர், விராட் கோலியை மறந்துவிட்டார். எனினும் ரசிகர்கள் மறக்கவில்லை. விராட் கோலியின் விக்கெட்டிற்கு போட்ட பவுலிங்கை காட்டுங்கள் எனக்கேட்டனர். இதனையடுத்து அந்த மாக் புல் ஷாட்டில் அவுட்டானதை சாஹீன் அஃப்ரிடி செய்து காட்டினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Story first published: Thursday, November 11, 2021, 18:45 [IST]
Other articles published on Nov 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+