Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - இலங்கையின் முக்கிய வீரருக்கு காயம்.. நமிபியாவுக்கு எதிராக களமிறங்கவில்லை

ஜீலாங் : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நமிபியா அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

கடந்த முறை இவ்விரு அணிகளும் டி20 உலககோப்பையில் விளையாடிய போது நமிபியா அணியை 96 ரன்களில் இலங்கை அணி சுருட்டியது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6 ஓவர்களுக்கு மேல் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

ஆனால் அதன் பிறகு சிறப்பாக விளையாடிய நமிபியா அணி, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.

டாஸ்

டாஸ்

நமிபியா அணி, பயிற்சி ஆட்டத்தில் கூட அயர்லாந்தை வீழ்த்திய உற்சாகத்துடன் தற்போது களமிறங்கியுள்ளது. இல்ங்கை அணி, ஆசிய கோப்பையை வென்ற உத்வேகத்துடன் உள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. புதிய மைதானம் என்பதால், ஆடுகளம் எப்படி செயல்படும் என்று தெரியவில்லை. இதனால், நாங்கள் முதலில் பந்துவீச முடிவு எடுத்துள்ளோம்.

முக்கிய வீரர் இல்லை

முக்கிய வீரர் இல்லை

எங்கள் அணி வீரர்கள் உத்வேகத்துடன் உள்ளனர். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்று வீரர்களுக்கு தெரியும். பயிற்சி ஆட்டத்தின் போது தில்சான் மதுசங்காவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் களமிறங்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக பிரமோத் சேர்க்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஷனாகா கூறினார்.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

இதனைத் தொடர்ந்து பேசிய நமிபியா கேப்டன் எராஸ்மஸ், எங்கள் வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான 3 ஆட்டம். மூன்று ஆட்டத்திலும் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவோம். முதலில் ரன்களை குவித்து, எதிரணிக்கு நெருக்கடி தருவோம். கீலாங் மைதானத்தில் ஆடுகளத்தின் இடதுபுறமும், வலதுபுறமும் பவுண்டரி மிகவும் சிறியது என்பதால், இன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். டி20 உலககோப்பை இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு அதிர்ச்சி அளிக்குமா நமிபியா?

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இலங்கை அணி 1, நிசாங்கா, 2, குசேல் மெண்டிஸ், 3,தனஞ்செய்யா டி சில்வா, 4,குணதிலகா, 5, ராஜபக்சே, 6, சனாகா,7,ஹசரங்கா, 8, கருணரத்னே, 9,சமீரா, 10, மகீஷ் தீக்சனா, 11, பிரமோத்

நமிபியா 1, ஸ்டிபன் பார்டு, 2, மைக்கேல் லான், 3,ஜான் நிக்கோல், 4,எராஸ்மஸ், 5,ஜென் பிராலிங், 6, ஸ்மிட், 7, டேவிட் வீய்ஸி, 8,திவான் லா காக் 9,சான் கிரீன், 10, பிர்ணாண்ட், 11 பென் சிக்காங்கோ

Story first published: Sunday, October 16, 2022, 10:31 [IST]
Other articles published on Oct 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+