Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக், நியூஸியை விட ஆஃப்கான் அணி டேஞ்சர்.. கோலிக்கு எச்சரிக்கை விடுத்த கவாஸ்கர்.. எப்படி சமாளிப்பது?

அமீரகம்: பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை விட ஆஃப்கானிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி என முன்னாள் வீரர் கபில் தேவ் எச்சரித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தற்போது இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மிக மோசமான தோல்வியை பெற்றது.

இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் மோசமாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது.

 வாழ்வா? சாவா?

வாழ்வா? சாவா?

இந்திய அணிக்கு இன்னும் மீதம் 3 போட்டிகள் உள்ளன. இந்த 3 போட்டிகளிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒருவேளை நியூசிலாந்து அணி அடுத்துள்ள ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்து வரும் 3 போட்டிகளுமே இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாகும்.

 ஆஃப்கானிஸ்தானுடன் மோதல்

ஆஃப்கானிஸ்தானுடன் மோதல்

அதில் முதல் போட்டியாக இன்று ஆஃப்கானிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்திய அணி இதுவரை நடைபெற்ற 2 ஆட்டத்தையும் துபாயில் விளையாடிய நிலையில் இந்த போட்டி அபுதாபியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

மிக டேஞ்சர்

மிக டேஞ்சர்

இந்நிலையில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆஃப்கான் அணி மிகவும் டேஞ்சரான அணி. டி20 போட்டியை பொறுத்தவரை அவர்கள் எந்தவித பயம், பதற்றமின்றி சுதந்திரமாக பேட்டை சுழற்றுவார்கள். அதுதான் அவர்களுக்கு பிடிக்கும். இதனால் பேட்டிங்கில் பிரச்னை இல்லை. சமீபகாலமாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக திணறிவருகின்றனர். அப்படி பார்த்தால் ஆஃப்கானிஸ்தானிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 இந்திய வீரர்கள் செய்ய வேண்டியவை

இந்திய வீரர்கள் செய்ய வேண்டியவை

ஆஃப்கானிஸ்தானில் முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய தலைவலி. பாகிஸ்தானின் இமாத் வாசீம், நியூசிலாந்தின் இஷ் சௌதியை விட இவர்கள் இருவரும் டேஞ்சர். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷ பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். பிட்ச்-ல் இருந்து இறங்கி வந்து பேட்டை சுழற்ற வேண்டும். அபுதாபி பிட்ச்-ல் பெரிதாக ஸ்பின் எடுபடாது. எனவே நன்கு இறங்கி வந்து பேட்டை சுழற்றுங்கள். அப்போது தானாக எதிரணி ஸ்பின்னர்கள் லைனை மாற்றி வீசி தவறு செய்வார்கள் என சுனில் கவாஸ்கர் அட்வைஸ் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 3, 2021, 16:14 [IST]
Other articles published on Nov 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+