Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாற்றங்களால் வந்த விணை.. நியூஸி,யிடம் மோசமான ஸ்கோரில் சுருண்ட இந்தியா.. வெற்றிக்கான சாத்தியம் என்ன?

அமீரகம்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பெரிய பேட்டிங் வரிசை வைத்திருந்த போதும் மோசமாக சொதப்பியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மிக முக்கிய போட்டியாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு தான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்ற சூழல் இருந்தது.

 டாஸிலேயே தோல்வி

டாஸிலேயே தோல்வி

அதன்படி இன்று போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மிகப்பெரும் பேட்டின் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது இஷான் கிஷான் மற்றும் கே.எல்.ராகுல் ஓப்பனிங்கிற்கு களமிறங்கினர். ரோகித் முதல் விக்கெட்டிற்கும், விராட் கோலி 4வது வீரராகவும் களமிறங்கினர்.

அடுத்தடுத்து விக்கெட்கள்

அடுத்தடுத்து விக்கெட்கள்

இந்த மாற்றங்கள் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆட்டத்தின் முதல் பந்து முதலே கடும் அழுத்தத்தில் இந்திய வீரர்கள் விளையாடினார்கள். இதன் விளைவாக, கே.எல்.ராகுல் 18 ரன்களுக்கும், இஷான் கிஷான் 4 ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதன் பின்னர் வந்த சீனியர் வீரர்களாவது உதவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

கேப்டன்கள் சொதப்பல்

கேப்டன்கள் சொதப்பல்

நிதானமாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி 17 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதே போல் துணைக் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு நடையை கட்டினார். அதிரடி காட்ட வேண்டிய ரிஷப் பண்ட் (12), ஹர்திக் பாண்ட்யா (23) என ஏமாற்றத்தையே கொடுத்தனர். இதனால் 97 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து இந்திய அணி பரிதாப நிலைக்கு சென்றது. இதில் மிகவும் சோகம் என்னவென்றால் மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட இந்திய அணிக்கு கிடைக்கவில்லை.

குறைவான ஸ்கோர்

குறைவான ஸ்கோர்

கடைசி வரை நியூசிலாந்து அணி சிறப்பாக பந்துவீச, 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்களும், இஷ் சவுத்தி 2 விக்கெட்கள் மற்றும் டிம் சவுத்தி, ஆடம் மில்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். இவ்வளவு குறைவான ஸ்கோரை இந்திய அணி எப்படி கட்டுப்படுத்தப்போகிறது என்ற கேள்வி உள்ளது.

Story first published: Sunday, October 31, 2021, 21:21 [IST]
Other articles published on Oct 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+