Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட இது நல்லா இருக்கே.. டி20 உலகக்கோப்பைகாக இந்தியாவுக்கு ஜாக்பாட்.. ஏற்பாடு கொஞ்சம் பலம் தான்!

துபாய்: டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்காக இந்திய அணிக்கு சூப்பர் சர்ஃப்ரைஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

IND vs AFG Virat Kohli-ன் அசுரத்தனமான ஆட்டம்! அபார சதம் *Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர் தோல்விகளால்,தொடரில் இருந்தே வெளியேறிவிட்டது.

 டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

இந்திய அணியின் சொதப்பலை அடுத்து, ரசிகர்கள் அனைவரின் பார்வையும் டி20 உலகக்கோப்பை தொடரின் மீது திரும்பியுள்ளது. நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அணிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஐசிசி அறிவிப்பு

ஐசிசி அறிவிப்பு

இந்நிலையில் அனைத்து அணிகளுக்குமான பயிற்சி போட்டிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடனான டி20 தொடரில் மோதுகிறது. இதனை முடித்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இதில் வரும் அக்டோபர் 17ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனும், அக்டோபர் 19 நியூசிலாந்து அணியுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜாக்பாட்

ஜாக்பாட்

டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதே போல, நியூசிலாந்து அணியும் படு பலமாக உள்ளது. எனவே பயிற்சி போட்டியில் இந்த இரண்டு அணிகளை எதிர்த்து விளையாடுவது பிசிசிஐ-க்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இதனை நன்கு பயன்படுத்தினால் உலகக்கோப்பையை வெல்வது சற்று சுலபமாக அமையும்.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணி தனது பயிற்சி போட்டிகளாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை தான் எதிர்த்தது. அப்போது உலகக்கோப்பையை வென்றது. அதே சம்பவம் தற்போது மீண்டும் வருவதால், இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

Story first published: Thursday, September 8, 2022, 19:56 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+