“அப்படி போடு”.. தோனியின் சக்ஸஸ் ஃபார்முலாவை கையில் எடுத்த கோலி.. நியூசிலாந்துக்கு வைத்த செக்!
அமீரகம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.தோனியின் வெற்றிகரமான ஃபார்முலாவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி வரும் அக்.31ம் தேதியன்று மாலை நடைபெறுகிறது.
பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து போட்டி
இந்த தொடரில் இன்னும் இந்திய அணிக்கு மீதம் 4 போட்டிகள் உள்ளன. எனினும் நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் தான் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற சூழல் நிலவி வருகிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து உள்ள ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா அணிகளை சுலபமாக வீழ்த்தி 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு சென்றுவிடலாம்.

மாற்றம்
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் ஃபார்முலாவை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. ஆனால் 6வதாக ஒரு பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய கேப்டன் விராட் கோலி மிகவும் சிரமப்பட்டார்.

தோனி ஃபார்முலா
இதன்காரணமாக நியூசிலாந்து போட்டியில் தோனியின் ஆஸ்தான ஃபார்முலாவான 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அணி சுழற்பந்துவீச்சில் அசைக்க முடியாத ஒன்றாக உள்ளது. இரவு நேரங்களில் தான் அனைத்து லீக் போட்டிகளிலும் நடைபெறுவதால் பனியின் தாக்கம் இருக்கும். எனவே அங்கு சுழற்பந்துவீச்சு தான் எடுபடும்.
Recommended Video

பவுலிங் படை
இதனை மனதில் வைத்து எம்.எஸ்.தோனி திட்டமிட்டுள்ளார். அதன்படி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் 11-க்குள் சேர்க்கப்படவுள்ளார். 3வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்ட்யா செயல்படவிருக்கிறார். அவர் வலைப்பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்டதால் நிச்சயம் 2 ஓவர்களையாவது வீசுவார் எனக்கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications