Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களின் விநோத செயல்.. பாக். போட்டியில் ரசிகர்களுக்கு ஆச்சரியம்.. காரணம் கேட்டு பூரிப்பு!

அமீரகம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் செய்த விஷயம் ஒன்று ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி தடுமாற்றத்துடன் 152 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

இந்த போட்டியில் யாரும் எதிர்பார்காத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது வழக்கமாக உலகக்கோப்பை தொடரில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணிகளின் தேசிய கீதங்களும் ஒலிக்கப்படும். அதுபோன்று இன்றைய போட்டியில் ஒலிக்கப்படவிருபந்த போது களத்திற்குள் வந்த இந்திய வீரர்கள் அனைவரும் திடீரென ஒரே மாதிரி மண்டியிட்டனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

அவர்களின் இந்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தனர். இந்த செயலுக்கான அர்த்தம் என்னவென்றால் "Black lives matter" என்பது தான். அதாவது கடந்தாண்டு அமெரிக்காவில் கருப்பிணத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளோய்ட் என்பவரை இனவெறியினால் காலில் நசுக்கி அமெரிக்க காவலர் ஒருவர் கொலை செய்தார். இந்த சர்ச்சை உலகம் முழுவதும் சர்ச்சையை கிளப்ப Black Lives matter என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.

 விழிப்புணர்வுகள்

விழிப்புணர்வுகள்

இதற்கு முன்னர் இதுபோன்று மண்டியிட்டு பல்வேறு விளையாட்டு வீரர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் செய்துள்ளனர். இந்திய அணியில் கூட ஏற்கனவே ஹர்திக் பாண்ட்யா இதனை செய்து விழிப்புணர்வை செய்துள்ளார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது ஏன் இந்திய அணி செய்தது என்ற கேள்வி இருந்தது.

இப்போது செய்ய காரணம்

இப்போது செய்ய காரணம்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் என்பதால் உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் இதன் மீதுதான் இருக்கும். இந்த போட்டியில் யார் எந்த விஷயத்தை மேற்கொண்டாலும் அது, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் அந்த முன்னெடுப்பை எடுத்தால் நன்றாக இருக்கும் என இந்திய வீரர்கள் நினைத்துள்ளனர்.

Story first published: Sunday, October 24, 2021, 22:53 [IST]
Other articles published on Oct 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+