Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எமனாக மாறிய கோலியின் திட்டம்.. சொல்லி சொல்லி அடித்த நியூஸி,பவுலர்கள்..ரசிகர்கள் சோகம்

அமீரகம்: பேட்டிங் வரிசையை மாற்றினாலும், பாகிஸ்தானிடம் செய்த அதே தவறை மீண்டும் இந்திய அணி செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பல்வேறு மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இந்த போட்டியில் ஓப்பனிங்கில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் விக்கெட்டிற்கு களமிறக்கப்பட்டார். ஆனால் இது கொஞ்சம் பலனளிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்களை சரிந்து தடுமாறி வருகிறது.

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

ஆட்டத்தின் முதல் ஓவர் முதலே இந்திய ஓப்பனர்கள் தடுமாறினர். முதல் 2 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. கடும் அழுத்தத்திற்கு சென்ற இஷான் கிஷான், தூக்கி அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த விக்கெட்டை ட்ரெண்ட் போல்ட் எடுத்து அசத்தினார். பவர் ப்ளே ஓவர்களில் பாகிஸ்தானின் சாஹின் அஃப்ரிடியை போன்றே செயல்படுவேன் எனக்கூறியதை போல்ட் நிரூபித்தார்.

 மீண்டும் சரிவு

மீண்டும் சரிவு

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா ஜோடி சற்று சிக்ஸர், பவுண்டரி என அதிரடி காட்டினர். ஆனால் நீண்ட நேரம் அது நீடிக்கவில்லை. 5 ஓவரில் டிம் சவுத்தி வீசிய பந்தை தவறான ஷாட் ஆடி கே.எல்.ராகுல் 18 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஹிட் மேன் ஏமாற்றம்

ஹிட் மேன் ஏமாற்றம்

பின்னர் வந்த கேப்டன் கோலி - ரோகித் சர்மா ஆகியோர் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு சிறிது கூட நியூசிலாந்து வீரர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. டிம் சவுத்தி வீசிய பந்தில் தூக்கி அடிக்க முயன்று ரோகித் சர்மா 14 ரன்களுக்கு நடையை கட்டினார்.

சீனியர் வீரர்களும் சொதப்பல்

சீனியர் வீரர்களும் சொதப்பல்

துணைக் கேப்டன் அவுட்டான சிறிது நேரத்திலேயே கேப்டனும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி சோதீ வீசிய பந்தில் 9 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் 48 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.

Story first published: Sunday, October 31, 2021, 20:47 [IST]
Other articles published on Oct 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+