Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'இன்று நிர்ணயமாகிறது இந்திய அணியின் விதி' எமனாக நிற்கும் நியூஸி, ஆஃப்கான்.. சிக்கி தவிக்கும் கோலி!

அமீரகம்: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறுமா என்ற விதியை நிர்ணயிக்க கூடிய போட்டிகள் இன்று நடைபெறவிருக்கிறது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த முறை இந்திய அணி படு மோசமாக அடி வாங்கி வருகிறது. இதுவரை நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் படுதோல்வி அடைந்தது.

தொடர்ச்சியாக பெற்ற 2 தோல்விகளால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அரையிறுதி வாய்ப்புகள்

அரையிறுதி வாய்ப்புகள்

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இன்னும் நூலிழையிலான வாய்ப்பே உள்ளது. அதாவது நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அடுத்து வரும் போட்டிகளில் ஏதேனும் ஒரு தோல்வியாது பெற வேண்டும். அப்படி நடந்தால், இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது. எனினும் அதனை பயன்படுத்த இந்திய அணி அடுத்து வரும் 3 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெறவேண்டியது அவசியம்.

இன்றைய முதல் போட்டி

இன்றைய முதல் போட்டி

இந்நிலையில் இந்திய அணியின் விதியை நிர்ணயிக்கக்கூடிய போட்டிகள் இன்று நடக்கிறது. இன்று மதியம் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி ஏற்கனவே விளையாடியுள்ள 2 போட்டிகளில் 1 வெற்றி பெற்று +0.765 என்ற ரன்ரேட்டுடன் உள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியில் வெற்றிகண்டால் அது இன்னும் அதிகரிக்கும். இதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நமிபியாவை ஆகிய சிறிய அணிகளை வீழ்த்தி 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு செல்லும்.

ஆஃப்கான் - இந்தியா

ஆஃப்கான் - இந்தியா

இதே போல இன்று இரவு இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை கண்டுள்ளது. அந்த அணியின் ரன் ரேட் +3.097 என மிகச்சிறப்பாக உள்ளது. ஒருவேளை இன்று இந்திய அணியை வீழ்த்திவிட்டால் 3 வெற்றிகள் மற்றும் அதிக ரன் ரேட் என்ற அடிப்படையில் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும். நியூசிலாந்தையும் வீழ்த்திய பின்னர் அது உறுதியாகும்.

இந்தியாவுக்கு தான் பிரச்னை

இந்தியாவுக்கு தான் பிரச்னை

எனவே இன்று நடைபெறும் இரண்டு போட்டியுமே ஒருவகையில் இந்திய அணிக்கு பிரச்னையாக தான் உள்ளது. அதாவது நியூசிலாந்து வெற்றி பெற்றாலும் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கும். அதே போல ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிடும். ஒருவேளை நியூசிலாந்தும் தோற்று, ஆஃப்கானிஸ்தான் அணியும் தோல்வியடைந்தால் மட்டுமே இந்தியா அரையிறுதி செல்ல ஓரளவிற்கு வாய்ப்புள்ளது. அதுவும் தற்போதுள்ள - 1.609 என்ற ரன்ரேட்டை அதிகப்படுத்தினால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 3, 2021, 19:42 [IST]
Other articles published on Nov 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+