Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் என்று தெரியாமல் ஸ்டெயினுக்கு பந்துவீச சொல்லி தந்த அமெரிக்க பயிற்சியாளர்- வீடியோ

நியூயார்க் : அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

அது மட்டும் அல்லாமல் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை நடைபெறும் சமயத்தில் கிரிக்கெட்டை அமெரிக்கர்கள் கற்றுக் கொள்வதற்காக பல்வேறு ஏற்பாடுகளை ஐசிசி செய்துள்ளது.

t20 world cup indian national cricket team cricket 20 2024

அதன்படி அங்கு வரும் அமெரிக்கர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்று சொல்லித் தர சில பயிற்சியாளர்களை ஐசிசி நியமித்துள்ளது. மேலும் பேட்டிங் எப்படி செய்வது என்றும் சில பயிற்சியாளர்கள் அங்கு வரும் அமெரிக்கர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டெயின் அங்கு சென்று இருக்கிறார்.

அப்போது அங்கு இருந்த பயிற்சியாளர் இது ஸ்டெயின் என்று தெரியாமல் அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று சொல்லிக் கொடுக்கிறார். அதை பார்த்து ஸ்டெயினும் பந்து வீசுகிறார். அப்போது ஸ்டெயின் எப்படி பந்து வீசுவது என்று சில சந்தேகங்களையும் அவரிடம் கேட்கிறார்.

இதற்கு அவரும் பதில் சொல்லிக் கொடுத்திருக்கிறார். கடைசி வரை அந்த வீடியோவில் தான் யார் என்று ஸ்டெயின் வெளிப்படுத்தவே இல்லை. இது தற்போது வைரல் ஆகி வருகிறது. தென்னாபிரிக்க அணிக்காக 93 டெஸ்ட்,125 ஒருநாள் மற்றும் 47 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 699 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

பல்வேறு சாதனைகளை சர்வதேச கிரிக்கெட்டில் படைத்துள்ள நிலையில் அது யார் என்று கூட அங்கு இருக்கும் அமெரிக்க பயிற்சியாளருக்கு தெரியவில்லை. கிரிக்கெட் ஜாம்பவானுக்கு பந்து வீச சொல்லிக் கொடுக்கும் காமெடி அமெரிக்காவில் மட்டும்தான் நடைபெறும் என்று ரசிகர்கள் தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, June 6, 2024, 17:30 [IST]
Other articles published on Jun 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+