ஹிட் மேனுக்கு வைத்த ஆப்பு.. ப்ளேயிங் 11ல் திடீர் ட்விஸ்ட் கொடுத்த கோலி.. நியுஸி, வீரர்களுக்கே ஷாக்!
அமீரகம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத மாற்றங்களை செய்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் தோல்வியை சந்தித்த இந்திய அணி, இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
துபாய் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? போட்டியாக பார்க்கப்படுகிறது.

டாஸில் தோல்வி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸில் தோல்வியடைந்தாலும், மிகவும் வலுவான அணியுடன் கோலி களமிறங்கியுள்ளார். கடந்த போட்டியில் நடந்த தவறுகளுக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.

ட்விஸ்ட்
பேட்டிங்கை பொறுத்தவரை ஓப்பனிங் ஜோடியே மாற்றப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுடன் இளம் வீரர் இஷான் கிஷான் களமிறங்கவுள்ளார். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலியும், 2வது விக்கெட்டிற்கு கே.எல்.ராகுலும் களமிறங்குகின்றனர். கடந்த போட்டியில் சொதப்பிய சூர்யகுமார் யாதவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர்கள்
ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டு களமிறக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்ட்யா கடந்த 2 நாட்களாக தீவிர பவுலிங் பயிற்சி மேற்கொண்டுள்ளதால் இன்றைய போட்டியில் நிச்சயம் 2 ஓவர்களை வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலர்கள்
இதே போல வேகப்பந்துவீச்சாளர்களில் கடந்த சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதாவது மொத்தமாக 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

ப்ளேயிங் 11 விவரம்
ரோகித் சர்மா, இஷான் கிஷான், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, ஷமி, வருண் சக்கரவர்த்தி


Click it and Unblock the Notifications