Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஷர்துலுக்கு அதிகரித்த கெடுபிடி” அப்செட்டில் இருக்கும் 2 சீனியர் வீரர்கள்.. இந்திய ப்ளேயிங் 11 உறுதி

அமீரகம்: இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து கேப்டன் விராட் கோலியின் திட்டம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டும் தான் அரையிறுதிக்கான ரேஸில் இருக்க முடியும் என்பதால் இந்திய வீரர்கள் திவீரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என முன்னாள் வீரர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

கடந்த போட்டியில் இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதே போல ஹர்திக் பாண்ட்யா பவுலிங் போடாமல் இருப்பதால் அவரையும் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

இந்நிலையில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூரை அழைத்து வரவுள்ளார் விராட் கோலி. இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியின் திட்டத்தில் ஷர்துல் உள்ளார். ஆனால் அவரை எந்த வீரருக்கு மாற்றாக எந்த இடத்தில் பயன்படுத்துவோம் என்பது கூற முடியாது எனத்தெரிவித்துள்ளார்.

வெளியேறுவது யார்

வெளியேறுவது யார்

ஹர்திக் பாண்ட்யா கடந்த சில நாட்களாக பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நிச்சயம் அடுத்த போட்டியில் 2 ஓவர்களையாவது வீச தயாராக இருப்பதாக தெரிகிறது. இதனால் புவனேஷ்வர் குமாரை உட்காரவைத்துவிட்டு தான் ஷர்துல் கொண்டு வரப்படவுள்ளார் என உறுதியாகியுள்ளது. இதே போல வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக அஸ்வின் களமிறக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க கோலி முடிவெடுத்துள்ளார்.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி

Story first published: Sunday, October 31, 2021, 18:51 [IST]
Other articles published on Oct 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+