ஷர்துல் தாக்கூர் அணியில் இருக்காரா? இல்லையா?.. வாய்திறந்த விராட் கோலி.. நியூஸி,க்கு ஆப்பு ரெடி!
அமீரகம்: இந்திய அணியில் ஷர்துல் தாக்கூரை சேர்ப்பது குறித்து விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பு என்ற இக்கட்டான சூழலில் உள்ளது.

முக்கிய போட்டி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பேட்டிங் எந்த அளவிற்கு காரணமோ, அதே அளவிற்கு பந்துவீச்சும் மோசமாக இருந்தது. 152 என்ற ஸ்கோரை பாகிஸ்தான் அடிப்பதற்குள் ஒரு விக்கெட்டை கூட இந்திய அணியால் எடுக்க முடியவில்லை. இதனால் நியூசிலாந்து போட்டியில் நிச்சயம் பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

மாற்றம்
குறிப்பாக அணியின் பவுலிங் படையில் இளம் வீரர் ஷர்துல் தாக்கூர் நிச்சயம் கொண்டு வரப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள் அழுத்தம் திருத்தமாக கூறி வருகின்றனர். கடந்த போட்டியில் சொதப்பிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக கொண்டு வர வேண்டும், அல்லது பந்துவீசாமல் இருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்றாக கொண்டு வரவேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் அணியில் இருக்கிறாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

கோலி விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கோலி பேசியுள்ளார். அதில் அவர், இந்திய அணியின் திட்டத்தில் ஷர்துல் தாக்கூர் கண்டிப்பாக இருக்கிறார். தொடர்ந்து அவரின் திறமையை நிரூபித்து வருகிறார். அணிக்கு பலனளிக்க கூடிய வீரர் அவர். ஆனால் அவர் எந்த பணியை ஏற்க போகிறார். எந்த இடத்திற்கு சரியாக இருப்பார் என்பது குறித்து தற்போது நான் பேச முடியாது.

6வது பந்துவீச்சாளர்
இந்திய அணியில் 6வதாக ஒரு பவுலர் அவசியமாகிறது. பாகிஸ்தானுடனான போட்டியில் நாம் முதலில் பந்துவீசி இருந்தால், நிச்சயம் நான் 6வது பவுலராக செயல்பட்டிருப்பேன். ஆனால் குறைந்த இலக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் 2வது இன்னிங்ஸில் முதன்மை பவுலர்களை பயன்படுத்தினோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் 6வது பந்துவீச்சு தேவைப்படுகிறது என்று விராட் கோலி கூறினார்.


Click it and Unblock the Notifications