டி20 உலககோப்பை பயிற்சி ஆட்டம் - இலங்கை அபார வெற்றி.. குசேல் மெண்டீஸ் அதிரடி ஆட்டம்
மெல்போர்ன் : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கிறது.
இந்த நிலையில், வரும் 16 தேதி முதல் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. இதிலிருந்த மொத்தம் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்
இந்த நிலையில், முதல் சுற்றில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டம் நேற்று முதல் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

அதிரடி ஆட்டம்
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரடா நிசாங்கா 4 பவுண்டரிகளை விளாசி 21 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனஞ்செய்யா சில்வா, குணதிலகா, ராஜபக்சா ஆகியோர் தலா 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், மறுமுணையில் குசேல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடினார்.

அரைசதம்
29 பந்துகளை எதிர்கொண்ட நிசாங்கா 54 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். கேப்டன் சனாகா 16 ரன்கள் எடுக்க, ஆல்ரவுண்டர் ஹசரங்கா 14 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது.

முக்கிய விக்கெட்
189 ரன்கள் ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் செக்பவா 20 ரன்களும், கிரைக் எர்வின் 24 ரன்களும் சேர்த்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீஸ்லி 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 42 ரன்கள் சேர்த்தார். அந்த அணியின் நட்சத்திர வீரர்களான சென் வில்லியம்ஸ் 2 ரன்களிலும், சிக்கந்தர் ராசா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை வெற்றி
இறுதியில், மில்டன் சும்பா 25 பந்துகளில் 32 ரன்கள் சேர்க்க, ரியாடன புருல்,டோனி ஆகியோர் தலா 12 ரன்கள் அடித்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது, சிஎஸ்கே வீரர் தீக்சனா பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.


Click it and Unblock the Notifications