For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த முறை இந்தியா சாம்பியன்.. ஆனா அடுத்த உலக கோப்பை எங்கு நடக்கும்! எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன

டெல்லி: ஒரு வழியாக டி20 உலகக் கோப்பை திருவிழா நடந்து முடிந்துவிட்டது. இதில் இறுதிப் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் மூழ்கி இருக்கும் நிலையில், அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் எங்கு நடக்கிறது. அந்த தொடரின் பார்மெட் என்ன.. எந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.

கடந்த ஒரு மாதமாக பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஒரு வழியாக முடிந்துவிட்டது. இதில் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

t20 world cup ind vs SA

அடுத்த உலகக் கோப்பை தொடர் எங்கே நடைபெறும்.. அந்த தொடரின் பார்மெட் என்ன.. எந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.

எந்த நாடுகள்: அடுத்த ஐசிசி டி20 உலகக் கோப்பை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த 2021இல் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த இரு நாடுகளும் டி20 உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2012இல் இலங்கை தனியாகவும் 2016இல் இந்தியா தனியாகவும் உலகக் கோப்பையை நடத்தி இருந்தாலும், இரு நாடுகளும் இணைந்து நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

இந்த தொடர் 2026ஆம் ஆண்டில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முழு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

போட்டி எப்படி நடக்கும்: இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் அணிகள் 4 க்ரூப்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு க்ரூப்பிலும் ஐந்து டீம்கள் இருக்கும். அதில் ஒவ்வொரு க்ரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.. ஒரு க்ரூப்பில் 4 அணிகள் இருக்கும். அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இரண்டு அரையிறுதி போட்டிகள் நடக்கும் நிலையில், அதில் வெல்லும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

எந்த நாடுகள் தகுதி பெற்றுள்ளன: மொத்தம் 20 டீம்கள் பங்கேற்கும் நிலையில், அதில் 12 அணிகள் ஏற்கனவே அடுத்த 2026 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் நாடுகள் என்பதால் இந்தியாவும் இலங்கையும் தானாகவே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.

இவர்களைத் தவிர 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் ஏழு இடங்களைப் பிடித்த டீம்களும் தகுதி பெற்றுள்ளன.. அதாவது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை உலக கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.

20 டீம்கள்: மேலும், இந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சிறந்த ரேங்கிங்கில் உள்ள மூன்று டீம்களும் தகுதி பெற்றுள்ளன. அது நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இவை தவிர 8 அணிகள் குவாலிஃபையர் சுற்றில் பங்கேற்று தகுதி பெறும்.

ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியங்களில் இருந்து தலா இரண்டு அணிகள், கிழக்கு ஆசியா-பசிபிக் பிராந்தியம், அமெரிக்கா பிராந்தியத்தில் இருந்து தலா ஒரு அணிகள், தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இருந்து தகுதி பெறும். இந்த 20 அணிகள் தான் உலகக் கோப்பையில் களமிறங்கப் போகிறது.

Story first published: Sunday, June 30, 2024, 14:48 [IST]
Other articles published on Jun 30, 2024
English summary
India Sri Lanka jointly to host next T20 World Cup: Total of 20 teams are Qualified for world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+