Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அனுபவமே இல்ல..ஆனா வாய்ப்பு” ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக களமிறங்கும் 5 வீரர்கள்.. சோபிக்க முடியுமா

மும்பை: ஆஸ்திரேலிய களத்தில் இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாத 5 வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் 5 வீரர்கள் இதுவரை ஆஸ்திரேலியாவில் விளையாடியதே கிடையாது.

அர்ஷல்

அர்ஷல்

ஐபிஎல் தொடரின் மூலம் அசத்தியிருந்த அர்ஷ்தீப் சிங், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆஸ்திரேலிய களம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதுவும் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக உள்ள அர்ஷ்தீப் சிங்கிற்கு இங்கு நல்ல பலன் கிடைக்கும். இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிராத இவர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஹர்ஷல்

ஹர்ஷல்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் மூலம் இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக உள்ள ஹர்ஷல் பட்டேல் தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவில் கால் பதித்தது கிடையாது. எனவே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான அந்த களம், ஹர்ஷலுக்கு கம்பேக் கொடுக்கும் இடமாக இருக்கலாம்.

சர்ச்சை வீரர்

சர்ச்சை வீரர்

சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறுவார் என்று இருந்த இடத்தில் தான் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங் மட்டுமல்லாது சுழற்பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படுவது தான் அவர் சேர்க்கப்பட்டுள்ளதற்கு ஒரே காரணம். ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடும் இவர், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய சிக்கலில் உள்ளார்.

அக்‌ஷர்

அக்‌ஷர்

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியதால், அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் இதுவரை 26 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள போதும், ஒருமுறை கூட ஆஸ்திரேலிய களத்தை எதிர்கொண்டதில்லை. எனினும் அங்கு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதால், அந்த அனுபவம் அக்‌ஷருக்கு உதவும் எனத்தெரிகிறது.

சூர்யகுமார்

சூர்யகுமார்

இந்திய அணியில் தற்போது நிலையான ஃபார்மில் இருக்கும் ஒரே வீரர் என்றால் அது சூர்யகுமார் யாதவ் தான். இதுவரை 28 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 811 ரன்களை அடித்து ஐசிசி தரவரிசை பட்டியலில் டாப்பில் உள்ளார். எனினும் இவர் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்தது கிடையாது. இதனால் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, September 13, 2022, 17:38 [IST]
Other articles published on Sep 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+